கோவை ஸ்மார்ட் சிட்டி வாலாங்குளத்தில் பரபரப்பு.. கேபிளை வெட்டிய நபர் சொன்னதை கேட்டு ஆடிப்போன போலீஸ்
கோவை: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட வாலாங்குளம் குளக்கரையில் நடந்த சம்பவம் ஒன்று ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அதிர வைத்து வருகிறது.. இப்படியொரு கேவலமான காரியத்தை செய்திருப்பது 22 வயது இளைஞர்.. இவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது வாலாங்குளம் குளக்கரையில்?
கோவை என்றாலே அழகுதான்.. அதுவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மிளிரும் வாலாங்குளம் பகுதி என்றால் கேட்கவே வேண்டாம்.. சாயங்கால நேரத்தில் இங்கு வாக்கிங் செல்பவர்கள் ஏராளம்.. ஊஞ்சலில் விளையாடி, இயற்கையை ரசிக்கும் குடும்பங்களும் ஏராளம்.. கைகோர்த்து பேசும் காதல் ஜோடிகளும் ஏராளம்.. அதனால் இந்த இடம் எப்போதுமே பிஸியாகவும், கலகலப்பாகவும்காணப்படும்.

கோவை ஸ்மார்ட் சிட்டி
ஆனால், வெளிச்சம் இருக்கும் இடத்தில் நிழலும் இருக்கும்தானே.. அதுபோலத்தான் இந்த குளக்கரையிலும் இரவில் சில அசம்பாவிதங்களும், அத்துமீறல்களும் நடப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.. இதுக்காகவே அங்கு ஸ்பெஷலாக செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. இரவில் தேவையில்லாமல சுற்றித்திரிபவர்களை அப்புறப்படுத்தும் பணியில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில்தான், நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு நடந்த ஒரு சம்பவம், பாதுகாப்பு பணியில் இருந்தவர்களையும், போலீசாரையும் அதிர வைத்திருக்கிறது.
வாலாங்குளம் குளக்கரை
நள்ளிரவு சுமார் 12 மணி இருக்கும். வாலாங்குளம் பகுதியில், இளைஞர ஒருவர் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்துள்ளார். செக்யூரிட்டிகள் இதை தூரத்திலிருந்தே கவனித்துள்ளனர்.. அந்த இளைஞர் மீது சந்தேகமும் வலுத்தது.. பிறகு அந்த இளைஞர் குளக்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் கேபிள்களை, ஒயர் கட்டரால் நறுக்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..
இதனால் உடனடியாக இளைஞரை பிடிக்க பாதுகாவலர்கள் ஓடி சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் அந்த இளைஞர், இருளுக்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டார்.. போலீசார் இருப்பதை அறிந்து அந்த நபர் ஓடிவிட்டதாகவே அனைவரும் நினைத்தார்கள்.. ஆனால், அந்த இளைஞர் 1 மணி நேரத்திற்கு பிறகு, அதாவது நள்ளிரவு 1 மணிக்கு மறுபடியும் அதே பகுதிக்கு வந்துள்ளார்.
மின் கேபிள் ஒயர் - கட்டர்
தான் கேபிளை வெட்டிய இருட்டு பகுதிக்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் மறைந்து நின்று கொண்டார்.. இதை கவனித்துவிட்ட செக்யூரிட்டிகள், இந்த முறையும் அவரை தப்பவிடக்கூடாது என்பதால், நைஸாக இளைஞரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்துவிட்டனர்.
உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று தங்களது பாணியில் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் வெளிவந்த உண்மையைக் கேட்டு அதிகாரிகளே ஒரு நிமிடம் அதிர்ந்து போய்விட்டார்கள்.
அதிர்ச்சி வாக்குமூலம்
கைது செய்யப்பட்டவர் கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த 22 வயதான பிரசாத் என்பது தெரியவந்தது. இரவில் அங்கு வரும் ஜோடிகள், தம்பதிகள் செய்யும் லீலைகளை, யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து வேவு பார்ப்பதே இவருடைய வழக்கமாம்.
ஆனால், தான் மறைந்திருந்து இப்படி பார்ப்பதை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காகவும், அந்தப் பகுதியில் வெளிச்சமே இல்லாமல் செய்து விட வேண்டும் என்று நினைத்தாராம்.. இதற்காகவே அங்கிருந்த மின் கேபிள்களை வெட்டிவிட்டு இருட்டில் நின்று கொள்வாராம்..
இவ்வளவயும் போலீசாரிடம் வாக்குமூலமாக பிரசாத் தந்ததையடுத்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரை கைது செய்தனர்.. அவரிடமிருந்த பைக், ஒரு ஐபோன் மற்றும் கேபிள்களை துண்டிக்க பயன்படுத்திய ஒயர் கட்டர் என அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஸ்மார்ட் சிட்டி குளக்கரையில் நள்ளிரவில் ஜோடிகளை நோட்டம் பார்க்கப்போய், இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் இந்த இளைஞர் பிரசாத்...!!!


Click it and Unblock the Notifications
