Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை ஸ்டார் ஓட்டலில் காஸ்ட்லி விருந்து.. செந்தில் பாலாஜியை வீழ்த்த வேலுமணி வீசிய பவர்ஃபுல் ஸ்ட்ரோக்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் அதிமுகவின் செல்வாக்கைத் தக்கவைக்க, மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரகசியமாகச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளாராம்.. செந்தில் பாலாஜியின் அரசியல் சவாலை முறியடிக்க, சுமார் 2.5 லட்சம் ரஜினி ரசிகர்களின் வாக்குகளை அதிமுக பக்கம் திருப்புவதே இந்த ரகசியத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக தெரிகிறது.. இதுகுறித்த முக்கிய தகவல்தான் நமக்கு இன்று கிடைத்துள்ளது.

கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. இதற்கு முக்கிய காரணம், கோவையின் தளபதி என வர்ணிக்கப்படும் மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணிதான்.

SP Velumani

கோயம்புத்தூர் தொகுதி

அதிமுகவிடமிருந்து குறிப்பாக வேலுமணியிடமிருந்து கோவையின் 10 தொகுதி களையும் திமுக கைப்பற்ற வேண்டும் என்கிற மெகா திட்டத்தில் தான், வேலுமணி யின் அரசியல் வியூகங்களை உடைக்கத் தோதான ஒரே நபர் செந்தில்பாலாஜி தான் என முடிவு செய்து, கொங்கு மண்டல பொறுப்பாளர் என்ற பதவியையும் கொடுத்து இப்போது கோவையிலேயே போட்டியிடவும் வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

கோவை தொண்டாமுத்தூரின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான வேலுமணி, மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். அது மட்டுமல்லாமல், கோவையில் அனைத்து தொகுதிகளையும் மீண்டும் அதிமுக கூட்டணியே வெற்றிப்பெற வேண்டும் என்கிற அசைன்மெண்டும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் வழக்கம்போல தனது தீவிர அரசியலையும் வியூகங்களையும் அரங்கேற்றி வருகிறார் வேலுமணி.

திமுக செந்தில் பாலாஜி

திமுக தரப்பில் செந்தில்பாலாஜியிடம் அசைன்மெண்ட் கொடுக்கப்படாமல் இருந்திருந்தால், வேலுமணி பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டார். ஆனால், வேலுமணிக்கு இணையாக அரசியல் சதுரங்கத்தை விளையாடுவதில் செந்தில் பாலாஜியும் கில்லாடி என்பதால், இந்த முறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாராம் வேலுமணி.

அந்த வகையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வாக்குகளைத் தவிர, திமுகவுக்கு செல்லலாம் என கருதப்படுகிற வாக்குகள், நடுநிலையாளர்களின் வாக்குகள், பொது நல சங்கங்களின் வாக்குகள் அனைத்தையும் அதிமுக பக்கம் திருப்பும் வகையில் சில பல ரகசிய சந்திப்புகளை நடத்தி, கொடுக்க வேண்டியதை கொடுத்து ஆதரவு திரட்டி வருகிறாராம் வேலுமணி.

ரஜினி ரசிகர்கள்

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர்களின் ஆதரவை திரட்டும் வகையில், ரஜினி ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளை சமீபத்தில் அழைத்து ஒரு ஸ்டார் ஹோட்டலில்,விருந்து வைத்திருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் பவர் ஃபுல்லாக இருந்த வேலுமணி, ரஜினியின் நட்பு வளையத்தில் இருந்தவர். ரஜினியை எந்த சூழலிலும் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றவர். அந்த அளவுக்கு ரஜினிக்கும் வேலுமணிக்கும் நட்பு உண்டு.

அந்த நட்பை பயன்படுத்தியே, கோவை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து விருந்து கொடுத்தார். அப்போது தேர்தல் தொடர்பாக நீண்ட நேரம், அவர்களுடன் விவாதித்துள்ளார் வேலுமணி.

குறிப்பாக, "தலைவர் ரஜினி அரசியலுக்கு வருவதில் உறுதியாக இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் வர இயலாமல் போய்விட்டது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இது உங்களுக்கே தெரியும். இப்போது அமைதியாக இருக்கிறார் ரஜினி . அதற்காக நீங்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது சரியல்ல. உங்களின் ஆதரவு எங்களுக்கு வேண்டும்.

ஸ்டார் ஓட்டலில் காஸ்ட்லி விருந்து

உங்கள் வாக்குகள் திமுகவுக்கு சென்றால் அது உங்களையே தாக்கும். ஆனால், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் உரிய கட்சி அதிமுக தான். அதனால் உங்களின் வாக்குகள் மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தினரின் வாக்குகளும் அதிமுகவுக்கு வேண்டும்" என்று உருக்கமாக பேசியிருக்கிறார் வேலுமணி. அதில் ரஜினி மன்றத்தினர் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள்.

கோவை மாவட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம் ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்களாம். கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் ரஜினி ஆதரவாளர்கள் யாரும் விசில் அடிச்சான் குஞ்சுகள் கிடையாது. பெரும்பாலும் 30, 35 வயதை கடந்த அரசியல் தெரிந்த விபரமானவர்கள் தான்.

அதனால், வேலுமணி சொன்ன வார்த்தைகளை நம்புபவர்களாக இருப்பதால் ரஜினி ரசிகர்களின் ஆதரவு அதிமுகவுக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் அடுத்தக்கட்ட வியூகத்திற்கு தயாராகியுள்ளாராம் அதிமுக எஸ்.பி. வேலுமணி.

- எழில்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+