அகிலன் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம்.. சகோதரிக்கு அரசு வேலை.. ஆறுதல் கூறிய அமைச்சர் சம்பத்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் வன்கொடுமையால் மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்வையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், உயிரிழந்த பள்ளி மாணவன் அகிலன் குடும்பத்தினருக்கு அமைச்சர் சம்பத்குமார் நேரில் ஆறுதல் கூறி ரூ. 6 லட்சம் நிவாரணத் தொகையையும், அரசுப் பணி நியமன ஆணையையும் வழங்கினார்.

கோவை மாவட்டம், பீளமேடு (இ-2) காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக, புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்) பிரிவுகள் 115(2), 108 மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

TVK Coimbatore Akilan Student Sampathkumar CBCID

இதனிடையே, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், காவல் துறையினரின் விசாரணையில் திருப்தி இல்லை எனக் கூறியும் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சில அமைப்பினர் உடலை வாங்க மறுத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

சிபிசிஐடிக்கு மாற்றம்

இவ்விவகாரம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் தரப்பிலிருந்து அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டது. வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்ட தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், இந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வழக்கின் அசல் ஆவணங்கள், டைரி மற்றும் கோப்புகள் அனைத்தையும் தாமதமின்றி சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோவை மாநகர போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்க தனி அதிகாரியை நியமித்து, ஆவணங்களைப் பெற்று தீவிர விசாரணையை உடனே தொடங்குமாறு சிபிசிஐடி பிரிவுக்கும் டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அகிலனின் உடலை வாங்குவதற்கு பெற்றோர், உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

6 லட்சம் நிவாரணம், அரசாணை

இதைத்தொடர்ந்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று இரவு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், அகிலனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, அரசு சார்பில் ரூ. 6 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதற்கான ஆணையையும், அகிலனின் சகோதரி நேத்ராவுக்கு ஆனைக்கட்டி பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையையும் அவர் வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகர காவல் ஆணையர் ரம்யா பாரதி, சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கிரி பிரசாத் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+