இப்படியுமா ஆகணும்.. சித்தூர் ஆற்றின் சுழலில் சிக்கிய கோவை மாணவர்கள்.. இருவர் பலியான சோகம்
கோவை: கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள சித்தூருக்கு சுற்றுலா சென்ற பொழுது ஆற்றின் சுழலில் இரு மாணவர்கள் சிக்கியுள்ளனர். இதில், கௌதம் என்ற மாணவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அருண் என்ற மற்றொரு மாணவரின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என சோஷியல் மீடியாக்களை திறந்தாலே சுற்றுலா செல்வது, குறைந்த மணி நேரத்தில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்கள் என பல இடங்கள் காண்பிக்கப்படுகின்றன. சமீபத்தில் கூட கூமாப்பட்டி என்கிற கிராமம் சமூக வலைதளங்களில் மிகவும் டிரெண்டானது. ஆனால் அந்த இளைஞர் கூறியதற்கும், அந்த இடத்திற்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. குறிப்பாக, இளைஞர் குறிப்பிட்ட பகுதிக்கு அனுமதியே இல்லை என்பது பிறகு தான் தெரியவந்தது.

இயற்கை எவ்வளவு அழகோ அவ்வளவு ஆபத்தும் நிறைந்தது. சமூக வலைதளங்களில் வரும் பதிவைப் பார்த்துவிட்டு பலரும் எக்ஸ்பிளோர் செய்கிறோம் என்கிற பெயரில் ஆறு, குளம், குட்டை, கடல், மலை போன்ற பகுதிகளுக்குச் சென்று ஆபத்தில் சிக்கும் நிலையும் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. சமீபத்தில் கூட ஆழியார் ஆற்றில் மூழ்கி மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள சித்தூருக்கு சுற்றுலா சென்ற பொழுது ஆற்றின் சுழலில் இரு மாணவர்கள் சிக்கியுள்ளனர். இதில், கௌதம் என்ற மாணவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அருண் என்ற மற்றொரு மாணவரின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 10க்கும் மேற்பட்டோர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்தூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சித்தூரில் உள்ள ஆற்றில் இன்று பிற்பகல் மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்த பொழுது ஆற்றில் ஏற்பட்ட சுழலில் சிக்கி அருண் என்ற மாணவர் இழுத்துச் செல்லப்பட்டார். அடுத்த சில விநாடிகளிலேயே அந்த இடத்தில் நீந்தி கொண்டிருந்த கௌதம்ஸ்ரீ என்ற மாணவரும் சுழலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஆற்றின் சூழலில் 2 மாணவர்களும் அடுத்தடுத்து இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அதிர்ச்சி அடைந்த உடன் வந்த மாணவர்கள், உடனடியாக கிராம மக்களுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் தேடிய நிலையில் ஸ்ரீகௌதமின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.
மற்றொரு மாணவரான அருணை தேடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவியர் வார இறுதி நாட்களை நண்பர்களுடன் உற்சாகமாக கழிப்பதற்காக சென்ற நிலையில் இந்த சோகம் நடைபெற்றுள்ளது. அருணை தேடக்கூடிய பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாலக்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications