திமுகவுக்கு தாவப்போகும் இன்னொரு கொங்கு மண்டல எம்.எல்.ஏ.. எல்லா கட்சிக்கும் ‘ஷாக்’ ட்ரீட்மெண்ட்!
கோவை : அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஸ்கெட்ச்சில், தேமுதிகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரும் சிக்கியுள்ளார். அவரும் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலத்திற்கு 3 நாள் பயணமாகச் சென்றிருக்கிறார். பொள்ளாச்சியில் இன்று மாலை திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைய இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கச்சிதமாகச் செய்து முடித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அதிமுகவில் இருந்து 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள் திமுகவிற்கு தாவுவதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் தேமுதிகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரும் திமுக பக்கம் வரவிருக்கிறார்.

கொங்கு மண்டலத்தில்
கடந்த பல ஆண்டுகளாக கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. கடந்த முறை ஆட்சியைப் பறிகொடுத்தாலும் கூட கொங்கு மண்டலத்தில் முக்கால்வாசி தொகுதிகளை அதிமுகவே கைப்பற்றியது. குறிப்பாக, கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்தது. இதையடுத்து, கோவையில் திமுகவை பலப்படுத்தும் வகையில் பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்தார் முதல்வர் ஸ்டாலின்.

அடுத்தடுத்து விசிட்
அமைச்சர் செந்தில் பாலாஜியும், கோவையில் முகாமிட்டு, கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் அதிரடியாக ஈடுபட்டு வருகிறார். அதன் பலனாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்றது திமுக. தொடர்ந்து, கோவையை கைப்பற்றும் வகையில், கோவைக்கு பல்வேறு திட்டங்களை அறிவிப்பதோடு, அவ்வப்போது சுற்றுப்பயணமும் மேற்கொண்டு திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் பயணம்
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்தார். முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து இன்று காலை முதல்வர் ஸ்டாலின் கிணத்துக்கடவு ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில், ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

பொள்ளாச்சியில் பிரமாண்டம்
இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி செல்கிறார். பொள்ளாச்சியில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் பிரமாண்ட விழா நடக்கிறது. மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி மாநாடு போல பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைய உள்ளனர்.

அதிமுக நிர்வாகிகள்
கோவை பகுதியைச் சேர்ந்த பாஜகவின் முக்கிய நிர்வாகி மைதிலி வினோ திமுகவில் இணைய இருப்பதாக தற்போது தகவல் வெளியானது. அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏவும் முன்னாள் கோவை மேயருமான செ.மா.வேலுச்சாமி, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உள்ளிட்டோர் இன்றைய பொதுக்கூட்டத்தில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

தேமுதிகவில் இருந்து
அதிமுக, பாஜக மட்டுமல்லாது, தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த்திற்கும் ஷாக் கொடுக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சூலூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவான தேமுதிக நிர்வாகி தினகரன் திமுகவில் இணையவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் ஸ்கெட்ச்சில் தேமுதிக தினகரனும் சிக்கியிருக்கும் தகவல் அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பனப்பட்டி தினகரன்
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் தொகுதியில் 2011 முதல் 1016 வரை எம்.எல்.ஏவாக இருந்தவர் தேமுதிகவின் பனப்பட்டி தினகரன். விஜயகாந்த்தின் தீவிர ரசிகரான தினகரன், தேமுதிக தொடங்கப்பட்டது முதல் அக்கட்சியில் இருந்து வருகிறார். கட்சி பலம் தாண்டி லோக்கலிலும் செல்வாக்கு மிக்கவர் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக 2016 தேர்தல் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்டபோதும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்
சகல கட்சியினரையும் திமுகவுக்கு திரட்டிக் கொண்டு வர அமைச்சர் செந்தில் பாலாஜி போட்ட ஸ்கெட்ச்சில் தேமுதிகவும் தப்பவில்லை. தேமுதிகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ தினகரனை இழுத்துள்ளார் செந்தில் பாலாஜி. இன்று மாலை பொள்ளாச்சி அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில், தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோருடன் திமுகவில் தினகரன் இணைய இருக்கிறார் என தகவல் கசிந்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications