கோவை தாலுகா ஆபீசில் கோப்புகளுக்கு அடியில் பணத்தை திணித்த எழுத்தர்.. கரெக்ட்டா அந்த நேரம் பார்த்து?
கோவை: கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, பதிவு எழுத்தரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அரசு அலுவலகங்களில் நிலவும் ஊழல் பிரச்சனையை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கில், வருவாய் துறை அதிகாரிக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

நீதிமன்றம் தந்த தண்டனை
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, கடந்த 2014ஆம் ஆண்டு தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய ஹரிஹரன், சான்றிதழ் வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் வழங்க மறுத்த கிருஷ்ணவேணி, இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து நடத்தப்பட்ட வலையில், லஞ்சத் தொகையை பெற்றுக் கொண்ட போது ஹரிஹரன் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஜெகநாதன், ஹரிஹரன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
நீதிமன்றம் இப்படியொரு தண்டனை தந்து 2 நாள்கூட ஆகவில்லை.. அதற்குள் மீண்டும் வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டுள்ளார் கோவை எழுத்தர் ஹரிஹரன்..
கோயம்புத்தூர் தாலுகா ஆபீஸ் எழுத்தர்
கோவை, வெள்ளகிணறு அருகே உள்ள உருமாண்டம்பாளையம் உழைப்பாளர் வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்... இவர் தன்னுடைய அப்பாவின் பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதற்காக வாரிசு சான்றிதழ் அவசியமாக இருந்ததால், கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.. காரணம் இவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வாரிசு சான்றிதழ் தொலைந்து விட்டதாம்.. அதனால் ஜெராக்ஸ் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து புதிய சான்றிதழ் வழங்குமாறு விண்ணப்பம் அளித்துள்ளார்..
வட்டாட்சியரின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, சான்றிதழின் நகலைப் பெற பதிவு எழுத்தராக பணியாற்றி வந்த ஹரிஹரன் (32) என்பவரை விஜயகுமார் அணுகியுள்ளார்.
வாரிசு சான்றிதழ் நகல்
அப்போது, வாரிசு சான்றிதழ் நகலை வழங்க வேண்டுமெனில் ரூ.7 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என ஹரிஹரன் கேட்டாராம்.. அந்த அளவுக்கு பணம் தன்னிடம் இல்லை என விஜயகுமார் சொன்னபோதும், லஞ்சம் தராமல் சான்றிதழ் வழங்க முடியாது என எழுத்தர் கறாராக சொல்லிவிட்டாராம்.
இதனால் மனமுடைந்த விஜயகுமார், கோவை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ரசாயன பொடி தடவிய ரூ.7 ஆயிரம் பணத்தை விஜயகுமாரிடம் வழங்கி, எழுத்தரிடம் கொடுக்க போலீசார் அறிவுறுத்தினர்.
கோவை கோப்புகளுக்கு அடியில்
அதன்படியே, வெள்ளிக்கிழமை விஜயகுமார் ஆபீசுக்கு சென்று லஞ்ச தொகையை ஹரிஹரனிடம் வழங்கினார். உடனே, அங்கு மறைந்திருந்த போலீஸார் எழுத்தரை சுற்றி வளைத்தனர்.. அத்துடன், எழுத்தர் ரூமுக்குள் சோதனையும் மேற்கொண்டனர்.. அந்த சோதனையில், கோப்புகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த ரூ.7 ஆயிரம் லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனர்..
இதனைத் தொடர்ந்து, பதிவு எழுத்தர் ஹரிஹரனை போலீஸார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்... அப்போது ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஒழிக்க தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் நம்பிக்கை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications