மன உளைச்சலுங்க.. முதலுக்கே மோசம் வந்துடும்! பவர் சென்டர் செந்தில் பாலாஜிக்கு.. கொங்கில் வந்த சிக்கல்
கோவை: 2026 சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை நியமித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால் கோவை திமுகவினர் கொடுக்கும் குடைச்சலால் கொங்கு மண்டலத்தை கொத்தாக வெல்ல முடியுமா என சந்தேகத்தில் இருக்கிறாராம் செந்தில் பாலாஜி.
2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும், 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் திமுக கணிசமான வெற்றியை பெற்றதற்கு செந்தில் பாலாஜியின் களப்பணி தான் காரணம். இது திமுக தலைமைக்கும் நன்கு தெரியும். எந்த வேலையை கொடுத்தாலும், கண கச்சதிதமாக செய்து முடிப்பதில் செந்தில் பாலாஜி வல்லவர். அதனால் தான் கொங்கு மண்டலத்தின் பவர் சென்டராக உள்ளார். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள 39 தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை வெற்றி பெற வைப்பது செந்தில் பாலாஜியின் பொறுப்பு.

கொங்கு மண்டலத்தில் திமுகவால் ஆழமாக வேரூன்ற முடியாமல் இருந்த நேரத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவால் கொங்கு மண்டலத்தில் பெரிய அளவில் வெற்றி பெற முடியாவிட்டாலும், அடுத்தடுத்து நடைபெற்ற 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் திமுகவிற்கு ஏறுமுகம் தான். அதற்கு காரணம் செந்தில்பாலாஜி தான்.இந்த நம்பிக்கையோடு தான் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறார் செந்தில் பாலாஜி. ஆனால் கோவையில் சொந்த கட்சிக்காரர்களே கொடுக்கும் குடைச்சலால் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம் அவர். அதாவது கோவையில் களமிறங்கியிருக்கும் செந்தில்பாலாஜியின் கரூர் டீமால் கடுப்பில் இருக்கிறதாம் கோவை லோக்கல் டீம்.
செந்தில் பாலாஜியின் டீமிற்கு ஒத்துழைப்பு
குறிப்பாக செந்தில் பாலாஜியின் டீமிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் திமுக காரர்களுக்கு முன்னாள் எம்எல்ஏ நா. கார்த்திக் முட்டுக்கட்டை போட்டு வருகிறராம். கொங்கு மண்டலத்தில் பொங்கலூர் பழனிச்சாமிக்கு பிறகு நான் தான் என பிடரியை சிலுப்பிக்கொண்டு இருந்த நா. கார்த்திக்கின் சொல்லுக்கே அங்கு மரியாதை இல்லாத நிலை ஏற்பட்டதால் கடுப்பில் இருக்கிறாராம் கார்த்திக். கடந்த 2021 தேர்தலில் கோவையில் உள்ள பத்து தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுகவும், ஒரு ஒரு தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றன. திமுகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை அதற்கு முந்தைய 2016 தேர்தலில் கோவையில் 9 தொகுதிகளை அதிமுக வென்ற நிலையில் சிங்காநல்லூர் தொகுதியில் ஒற்றை ஆளாய் ஜெயித்து கெத்து காட்டியவர் தான் நா. கார்த்திக். அதனால் தலைமையிடம் பாசிடிவ் ஒப்பீனியன் கார்த்திக் மேல் உள்ளது.
ஆனால், அந்த கார்த்திக் இப்போது செந்தில் பாலாஜியின் டீமிற்கு குடைச்சல் கொடுத்து வருவதை செந்தில் பாலாஜி ரசிக்கவில்லையாம். தலைமையின் உத்தரவிற்கு இணங்க தனக்கு வழங்கப்பட்ட ( நீலகிரி, கோவை,திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர்) 6 மாவட்டங்களில் உள்ள 39 தொகுதிகளில் பெருவாரியான தொகுதிகளை வென்று தலைமையின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என செந்தில் பாலாஜி மெனக்கிடுகிறார். அதிலும் குறிப்பாக அதிமுகவும் பாஜகவும் ஸ்ட்ராங்காக உள்ள கோவையில் திமுக கொடியை நாட்ட வேண்டும் என்கிற முனைப்பில் ஜரூராக வேலை பார்த்து வரும் செந்தில் பாலாஜி கார்த்தியை எப்படி டேக்கில் பன்ன போகிறார் என்பது தான் இப்போதைக்கு கொங்கு மண்டல உடன்பிறப்புகளின் பேச்சாக இருக்கிறது.
கரூர் டீமால் கடுப்பில் இருக்கிறதாம் கோவை லோக்கல் டீம்.
கோவை லோக்கல் டீமிற்கு மாவட்டம் முழுவதும் உள்ள வாக்காளர் குறித்த விபரங்களை டேடாவாக கலெக்ட் பன்னும் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் லோக்கல் டீம் கொண்டு வந்து தரும் டேட்டாக்களை செந்தில் பாலாஜி டீம் மதிப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்கள் சொந்த மாவட்டத்தில் வெளி மாவட்ட ஆட்களை களமிறக்கியதால் மன உளைச்சலில் இருக்கினராம் லோக்கல் உடன் பிறப்புகள். இந்த குளறுபடிகளால் அதிமுக குஷியில் இருக்கிறதாம்.
என்னதான் மாங்கு மாங்கு என வேலை பார்த்தாலும், உட்கட்சி பூசலை கண்டுகொள்ளாமல் விட்டால் முதலுக்கே மோசம் வந்து விடும் என்பதை செந்தில்பாலாஜிக்கு தெரியாதா என்ன?... உடனடியாக கோவை லோக்கல் திமுககாரர்களை சரிக்கட்டி, அவர்களுக்கான அங்கீகாரத்தையும், மரியாதையையும் செந்தில் பாலாஜி உறுதி செய்யாவிட்டால் கொங்குவை கொத்தாக அள்ளுவது சிரமம் தான் என்கிறார்கள் தொகுதி நிலவரம் நன்கறிந்தவர்கள். சிந்தனை செய் மனமே...
- சிறப்பு நிரூபர்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications