கோவையின் கேம் சேஞ்சராக மாறப்போகும்.. பிரம்மாண்ட திட்டம்.. ஒரே வாரத்தில் அசால்ட் வேகத்தில் தமிழக அரசு
கோவை: கோவையில் அடுத்தடுத்து பிரம்மாண்ட திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதன் ஒரு கட்டமாக கோயம்புத்தூரில் தமிழ்நாடு டெக் சிட்டியை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இதற்கான 3 முக்கியமான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.
நிலம் கண்டுபிடிப்பது, சந்தை மற்றும் தேவை பகுப்பாய்வு , நிதி ஆய்வு ஆகிய 3 நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில் 321 ஏக்கர் பரப்பளவில் PPP முறையில் TN டெக் சிட்டிக்கான விரிவான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான ஏலங்களை ELCOT வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் கட்டுமானம் தொடங்கி உள்ளது.

சமீபத்தில்தான் புதிய திருப்பமாக பிரபல ஐடி நிறுவனம் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் கோவையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. KGISL SEZ இல் ~300 பேருக்கு ஆரம்ப வேலை வாய்ப்புடன் புதிய அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக கோவையில் ஐடி புரட்சி நடக்க தொடங்கி உள்ளது.
கடந்த 2 வருடங்களாகவே கோவையில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. அங்கே தொழில் செய்வதற்கு ஏதுவான சூழல் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. கடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கூட கோவையில் பல்வேறு முதலீடு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
அதேபோல் கடந்த பட்ஜெட்டிலும் கோவைக்கு என்று பல அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில், தகவல் தொழில்நுட்பம் வாழ்வியல் அறிவியல் விண்வெளி பொறியியல் துறைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற உயர் தொழில்நுட்ப அலுவலகங்களுக்கான தேவை அதிகரிக்கிறது.
வளரும் கோவை: இதனை கருத்தில் கொண்டு 20 லட்சம் சதுர அடியில் இரண்டு கட்டங்களாக 1100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன வசதியுடன் தகவல் தொழில்நுட்ப பூங்கா கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும் .
ஐடி பூங்கா தவிர்த்து கோவையில் தனியாக இன்னொரு தொழிற்பூங்கா அமைக்கப்படும். என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெக் சிட்டி: கோயம்புத்தூரில் தமிழ்நாடு டெக் சிட்டியை நிறுவுவதற்கான விரிவான மாஸ்டர் பிளான் மற்றும் பரிவர்த்தனை ஆலோசனை சேவைகளைத் தயாரிப்பதற்கான ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏலங்களை ELCOT அழைத்துள்ளது.
நூலகம்: இந்த நிலையில்தான் கோவையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் பிரம்மாண்ட அறிவு மையம் அமைப்பதற்கு 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. ஒன்று ரேஸ்கோர்ஸ் அருகே 6 ஏக்கர் நிலம், மற்றொன்று மத்திய சிறை வளாகத்திற்கு அருகில் 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
பட்ஜெட்; 2024 தமிழ்நாடு பட்ஜெட்டில் கோவை மாவட்டத்திற்கு என்று ஏகப்பட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 10000 கோடிக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஐடி பூங்கா தவிர்த்து கோவையில் தனியாக இன்னொரு தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
கோவைக்கு என்று சிறப்பாக கைத்தறி சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்பது உட்பட மொத்தமாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 10000 கோடிக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஒரே நேரத்தில் முக்கியமான நல்ல செய்தியை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் வெளியிட்டு உள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications