கோவை டைடல் பார்க் பணிகள்.. ஏப்ரல் 30ல் நிறைவு.. 14 ஆயிரம் பேருக்கு வேலை.. எ.வ.வேலு சொன்ன குட் நியூஸ்
கோவை டைடல் பார்க் புதிய கட்டுமான பணிகள் வரும் ஏப்ரல் 30க்குள் நிறைவடையும் என்று எ.வ.வேலு கூறியுள்ளார்.
கோவை: கோவையில் ரூ.114.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் டைடல் பார்க் கட்டுமான பணிகள் வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் நிறைவடையும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இதன்பின்னர், 26 நிறுவனங்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 14 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்றும் எ.வ.வேலு கூறியுள்ளார்.
கோவை பீளமேடு டைடல் பார்க் வளாகத்தில் எல்கார்ட் நிறுவனத்தால் ரூ.114.6 கோடி மதிப்பீட்டில் 2 லட்சத்து 94 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஐ.டி நிறுவனங்களுக்காக புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி , மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
இந்த ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், இளைஞர்கள், பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். பொறியியல் பட்டதாரிகள் அதிகம் இருக்கும் பகுதியான கோவையில், எல்கார்ட் நிறுவனம் மூலமாக டைடல் பார்க் வளாகத்தில் கட்டப்பட்டு வந்த கட்டுமான பணி தாமதமாகி வந்ததால் நேரில் ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.

26 நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு
அதன்பேரில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடம் ரூ.114 கோடி மதிப்பீ்ட்டில் 6 தளங்களை கொண்டதாக கட்டப்பட்டு வருகின்றது. தீயணைப்பு வசதி, லிப்ட் வசதி, பார்க்கிங் என அனைத்து வசதிகளும் கொண்டதாக கட்டப்பட்டு வருகின்றது. இந்த வளாகத்தில் 26 நிறுவனங்களுக்கு இடம் கொடுக்க முடியும். இதன்மூலம் 14,000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவித்தார்.

14 ஆயிரம் பேருக்கு வேலை
தொடர்ந்து, கட்டுமான பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரர்கள் வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று தெரிவித்து இருக்கின்றனர். அதன் பின்னர் 26 நிறுவனங்களுக்கு இந்த இடம் ஒதுக்கப்படும். அதன் மூலம் 14,000 பேர் வரை வேலை வாய்ப்பு பெற இருக்கின்றனர். கோவையில் ஐ.டி நிறுவனங்கள் அமைய இன்னும் கூடுதலாக கட்டடம் தேவை ஏற்பட்டால் அரசு இடங்கள், தனியார் இடங்களை கையப்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னையில் ஐடி நிறுவனங்கள்
இளைஞர், பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த இந்த அரசு முனைப்புடன் இருக்கிறது. தமிழ்நாட்டில் பொறியியல் பட்டதாரிகள் அதிகமாக இருக்கிறார்கள். அதேபோல் மாவட்ட தலைநகரங்களிலும் தேவை இருக்குமானால் ஐடி நிறுவனங்களுக்கு கட்டிட வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications