கோவையில் நாளை இந்த ரூட்டு வழியா போயிடாதீங்க.. 5 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம்.. நோட் பண்ணுங்க
கோவை: கோவை அவிநாசி மேம்பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஹோப் காலேஜ் பகுதியில் மேம்பால இணைப்பு பணி நடைபெறவுள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு கோவை மாநகர காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 12 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப்பணி துவங்கப்பட்டு தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. அதன் இறுதிக் கட்டமாக ஹோப் காலேஜ் பகுதியில் இரயில்வே பாலத்தின்மேல் இரும்பு மேல்தளம் அமைத்து மேம்பாலத்தை இணைக்கும் பணி நடைபெறவுள்ளது.

இப்பணிகள் காரணமாக ஜூலை 9 ஆம் தேதி இரவு முதல் 13 ஆம் தேதி இரவு வரை தினமும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை பயனியர் மில் சந்திப்பு முதல் கோவை மருத்துவக் கல்லூரி வரை இருபுறமும் அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எந்தெந்தப் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது என்று பார்க்கலாம்.
நகரில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள்
கனரக வாகனங்கள், வெளியூர் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள்:
கோவை மாநகரில் இருந்து வெளியே செல்லும் கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் லட்சுமி மில் சந்திப்பில் இருந்து வலதுபுறமாக திரும்பி இராமநாதபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் வழியாக L&T பைபாஸ் ரோடு வழியாகவோ அல்லது ஜி.பி சிக்னல், கணபதி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி வழியாகவோ அவிநாசி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள்:
நகரிலிருந்து வெளியே செல்லும் அனைத்து இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் பயனியர் மில் சந்திப்பில் இடது புறம் திரும்பி ரொட்டிக்கடை மைதானம், காந்தி மாநகர், தண்ணீர்பந்தல், டைடல் பார்க் வழியாக சென்று அவிநாசி சாலையை அடையலாம்.
மாநகருக்குள் வரும் வாகனங்கள்
கனரக வாகனங்கள், வெளியூர் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் :
கோவை மாநகருக்குள் வரும் கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் தொட்டிபாளையம் பிரிவில் இருந்து வலதுபுறம் திரும்பி தொட்டிபாளையம், காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி வழியாகவோ அல்லது சித்ரா சந்திப்பில் யு டர்ன் செய்து காளப்பட்டி ரோடு, நால்ரோடு, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி வழியாகவோ அல்லது நீலம்பூரிலிருந்து L&T பைபாஸ் ரோடு வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், இராமநாதபுரம் வழியாகவோ நகருக்குள் வரலாம்.
இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள்:
கோவை மாநகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் சித்ரா சந்திப்பு அல்லது கொடிசியா சந்திப்பு அல்லது சி.எம்.சி சந்திப்பில் வலது புறம் திரும்பி டைடல் பார்க், தண்ணீர்பந்தல், காந்திமாநகர், ரொட்டிக்கடை மைதானம், பயனீர் மில் வழியாக அவிநாசி சாலையை அடைந்து நகருக்குள் வரலாம். சிங்காநல்லூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அவிநாசி சாலையில் வராமல், L&T பைபாஸ் ரோடு, சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர் வழியாக சிங்காநல்லூரை அடையலாம்.
சிங்காநல்லூரில் இருந்து ஹோப்ஸ் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் பெர்க்ஸ் பள்ளி, ஜி.வி ரெசிடென்சி, ஃபன்மால் வழியாக பயனீர்மில் சந்திப்பை அடைந்து காந்தி மாநகர், தண்ணீர்பந்தல் வழியாக அவிநாசி சாலையை அடைய வேண்டும். அல்லது ஒண்டிபுதூர் L&T பைபாஸ், நீலம்பூர் வழியாக அவிநாசி சாலையை அடையலாம்.
இந்தப் போக்குவரத்து மாற்றங்கள் ஜூலை 9 ஆம் தேதி இரவு முதல் 13 ஆம் தேதி இரவு வரை தினமும் இரவு 11.00 மணியில் இருந்து காலை 6 மணி வரை செயல்படுத்தப்படும்.
எனவே, மேம்பால இணைப்பு பணியின் காரணமாக செய்யப்பட்டுள்ள இந்த இரவு நேர போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு கொடுத்து போக்குவரத்து மாற்றத்திற்கேற்ப தங்களது பயண வழித்தடங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications