பெண்ணிடம் ரகளை செய்த தவெக நிர்வாகி.. ஷோரூமில் அத்துமீறல்.. கோவையில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

கோவை: கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக வெற்றிக்கு பெண் வாக்காளர்கள் முக்கிய காரணம். பெண்கள் பாதுகாப்புக்காக முதலமைச்சர் விஜய் சிங்க பெண் படை ஆரம்பித்தார். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக தவெக நிர்வாகிகள் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். பெண் கலெக்டர், மகளிரணி நிர்வாகிகள் என தவெக நிர்வாகிகளிடம் யாரும் தப்பவில்லை. கோவையில் தவெக நிர்வாகி ஒருவர் பொறுப்பு வாங்கி தருவதாக சொல்லி பெண்ணிடம் பணம் வாங்கியதுடன், அவரை மிரட்டிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கலிங்கநாயக்கன்பாளையம் பகுதி உள்ளளது. தவெகவை சேர்ந்த தொண்டர் ஒருவர் 'ஏ.என்.எஸ்' என்ற பெயரில் இருசக்கர வாகன விற்பனை மற்றும் பழுது நீக்கும் ஷோரூம் வைத்துள்ளார். அவருக்கு தவெகவின் நகரச் செயலாளர் பிரகாஷ் என்பவரிடம் பழகியுள்ளார். தவெகவில் இளைஞரணிப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் ரூ. 1 லட்சம் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

coimbatore-tvk-cadre-threatened-women-inside-showroom-shocking-video

தவெக நிர்வாகி ரகளை

பணத்தை வாங்கிவிட்டு பதவி தரவில்லை. இதனால் பிரகாஷ் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இதுதொடர்பாக அவர்கள் பிரகாஷிடம் அவ்வபோது கேள்வி கேட்டு வந்தனர். இதுதொடர்பாக பேச பிரகாஷ் அந்த ஷோரூமிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு உரிமையாளர் இல்லை. அவரின் மனைவி இருந்துள்ளார். மதுபோதையில் இருந்த பிரகாஷ், பெண்ணிடம் பிரச்சனை செய்ததாக புகார் எழுந்துள்ளது. ஷோரூமில் இருந்த இருசக்கர வாகனத்தைத் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஷோரூமின் பெண் உரிமையாளர், பிரகாஷின் செயலை தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தபடியே அவரைச் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பெண், "நீ என்ன பெரிய ரவுடியா ? உன் திமிரு, தெனாவெட்டு எல்லாம் வெளியே வைச்சுக்கோ. நீ தவெக கட்சினு சொன்னா பயந்துடுவோமா. நீ ஷோரூமுக்குள்ள வந்து வண்டியை எதுக்குத் தொடுற . ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கி இருக்க நீ. பொம்பளை கிட்ட வந்து வீரத்தைக் காட்டுறியா.

வீடியோ வைரல்

வெளியே போ... வெளியே போ. இவன் லஞ்சம் வாங்கியிருக்கான், நான் ஆதாரத்தோடு நிரூபிப்பேன் "என அவர் ஆவேசமாக பேசினார். பிரகாஷ் எதுவும் பேசாமல் ஷோபாவில் அமர்ந்திருந்தார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கோவை தவெக ஒன்றிய செயலாளர் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகியே பாலியல் மற்றும் சாதி வன்கொடுமைப் புகாரளித்திருந்தார். இதற்காக காவல்துறை வழக்கும் பதிவு செய்தனர். அதற்குள் அடுத்த சம்பவம் நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+