ரூ.7 டிக்கெட்டுக்கு ரூ.10.. “இஷ்டம் இருந்தா ஏறு” என்ற கண்டக்டர்.. கோவை உக்கடத்தில் பஸ்ஸை மறித்த பெண்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் 7 ரூபாய் டிக்கெட்டிற்கு 10 ரூபாய் வசூலித்து விட்டு, "இஷ்டம் இருந்தால் ஏறு, இல்லாவிட்டால் இறங்கு" என அடாவடியாகப் பேசிய தனியார் பஸ் கண்டக்டரை, பெண் ஒருவர் நடுரோட்டில் பேருந்தை மறித்து கேள்வி கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது.

கோவை மாவட்டம் காந்திபுரத்திலிருந்து உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் நகர பஸ்கள் இயங்கி வருகின்றன.

Coimbatore Bus Fare

கோவை உக்கடம் பஸ்

இந்நிலையில், உக்கடத்தில் இருந்து அண்ணா சிலை ஸ்டாப்புக்கு செல்வதற்காக பெண் பயணி ஒருவர் தனியார் பஸ்ஸில் ஏறியிருக்கிறார்.. வழக்கமாக உக்கடத்தில் இருந்து அண்ணா சிலை ஸ்டாப்பிங்குக்கு செல்ல, அரசு மற்றும் அனைத்து நகர பேருந்துகளிலும் 7 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், பெண் பயணிக்கு மட்டும் நேற்றைய தினம் 7 ரூபாய் டிக்கெட்டிற்கு 10 ரூபாய் வாங்கினாராம் கண்டக்டர்.

வழிமறித்த துணிச்சல் பெண்

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பயணி, "7 ரூபாய் டிக்கெட்டுக்கு எதுக்கு 10 ரூபாய் வாங்குறீங்க அண்ணா?" என்று கேட்டுளளார்.. ஆனால் அதற்கு கண்டக்டர், "நான் அப்படித்தான் வாங்குவேன்... இஷ்டம் இருந்தா பஸ்ஸில் வா, இல்லாட்டி இறங்கி போ.. உனக்கு எங்காவது கம்ப்ளைண்ட் பண்ணணுமா? வேணும்னா RTO-கிட்ட போய் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ" என்று கோபத்துடன் சொல்லியிருக்கிறார்.

கண்டக்டரின் இந்த அலட்சியமான பதிலை, அந்த பெண் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. உடனே அந்த பெண், பஸ்ஸில் இருந்து கீழே இறங்கி, அதே பஸ்ஸுக்கு முன்புறம் வந்து நின்று விட்டார்.. நடுரோட்டில் நின்றுகொண்டு,அந்த பஸ்ஸை நகர விடாமல் மறித்து, தன்னுடைய கேள்விக்கு பதில் வேண்டும் என்றார்.7 ரூபாய்க்கு 10 ரூபாய் எப்படி டிக்கெட் வாங்கலாம்? அதிகமாக வாங்கியதுடன், கேட்ட கேள்விக்கும் சரியாக பதில் சொல்ல மாட்டீர்களா? என்று கொந்தளித்து பேசினார்.

7 ரூபாய்க்கு 10 ரூபாய்

இதை பார்த்து பஸ்ஸிலிருந்த சக பயணிகளும், பொதுமக்களும் பெண்ணுக்காக ஆதரவு கேட்ட திரண்டனர். சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அப்படியே நின்று விட்டார்கள்.. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ஆனால், கோவையில் சில தனியார் பஸ்களில் இதுபோன்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிப்பதும், கேள்வி கேட்கும் பயணிகளிடம் கண்டக்டர்கள் மரியாதையில்லாமல் நடப்பதும் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

அதனால் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உடனடியாக ஆய்வு நடத்தி, அதிக கட்டணம் வசூலித்த சம்பந்தப்பட்ட தனியார் பஸ், மற்றும் கண்டக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+