‛மோதலை தூண்டுகிறார்’.. நாம் தமிழர் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் மீது பாய்ந்த வழக்கு! என்னாச்சு?
கோவை: நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது மோதலை தூண்டுவதாக கூறி கோவை உக்கடம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் பேசிய பேச்சுக்கு தற்போது 4 மாதங்களுக்கு பிறகு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில செயலாளராக இருப்பவர் இடும்பாவனம் கார்த்திக். இவர் நாம் தமிழர் கட்சி சார்பில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். மேலும் அவ்வப்போது தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் தான் இடும்பாவனம் கார்த்திக் கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கோவை மாவட்டம் உக்கடத்தில் எஸ்டிபிஐ சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார். பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் இடும்பாவனம் கார்த்திக் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசினார். இந்நிலையில் தான் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது இருபிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக இடும்பாவனம் கார்த்திக்கின் பேச்சு இருந்ததாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து 2 பிரிவுகளில் இடும்பாவனம் கார்த்திக் மீது உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேச நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசி மோதலை தூண்டுவதாக கூறி 2 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இடும்பாவனம் கார்த்தி உக்கடத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்று பேசி 4 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் தான் தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இடும்பாவனம் கார்த்திக் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என கூறிவருகின்றனர்.
சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி நாம் தமிழர் நிர்வாகிகள் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேளையில் கூட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் மக்கள் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது இடும்பாவனம் கார்த்திக் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications