கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில்.. இரக்கமே இல்லை .. இப்படியும் சில ஆட்டோ டிரைவர்கள்
கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் வயதான பயனிகளை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளி தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. உக்கடம் பேருந்து நிலையத்தில்,
அந்த வழியாக சென்ற பயனி ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆன கோவையில், முன்பை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விட்டது. எங்கு திரும்பினாலும் இருசக்கர வாகனங்களும் ஆட்டோக்களும் கார்களும் அதிக அளவில் பயணிக்கின்றன. கோவையில் மக்கள் தொகையும் பல லட்சம் கடந்த 15 வருடங்களில் அதிகம் ஆகிவிட்டது. மக்கள் தொகை நெருக்கத்திற்கு ஏற்ப எல்லா சாலைகளும் இப்போது நெரிசலில் தான் உள்ளன. பல பகுதிகளில் சிற்றுந்துகளோ அல்லது பேருந்துகளோ செல்ல முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளன. மக்கள் இருசக்கர வாகனம் இருந்தால்தான் பல இடங்களில் எளிதாக பயணிக்க முடியும் அதே நேரம் ஆட்டோ கார் போன்ற வாகனங்களையும் அதிக அளவில் வாடகைக்கு எடுத்து மக்கள் , தங்கள் இல்லங்களுக்கு அல்லது கடைகளுக்கு சென்று வருகிறார்கள். இன்றைய சூழலில் கோவை மாநகரில் ஆட்டோ மிக அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. அவசர சூழலில் ஆட்டோ தான் அவர்களுக்கு வரப் பிரசாதமாகவும் இருக்கிறது. ஏழைகள் பல குடும்பத்துடன் பயணிக்க இன்று ஆட்டோக்கள் பேருதவியாக இருக்கிறது.

அதே நேரம் சில ஆட்டோ ஓட்டுநர்கள் வாடகை கட்டுபடியாக அதன் நிலையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. சிலர் உணர்ச்சி பகுதியில் பயணிகளை கை ஓங்கி விடுகிறார்கள். ஒரு சில டிரைவர்கள் முதியோர் என்று கூட பார்க்காமல் தாக்கும் நிகழ்வும் நடந்து வருகிறது. அப்படித்தான் கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் சம்பவம் நடந்திருக்கிறது.

இன்று காலை கோவை உக்கடம் பேருந்து நிலையம் வந்த வயதான தம்பதிகள், ஆட்டோவில் செல்ல விரும்பி வந்துள்ளார்கள்.
வாடகை தொடர்பாக பேசியது வாக்குவாதமாக மாறிய நிலையில் , வயதான இருவரையும் ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டு, கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர் சில ஆட்டோ ஓட்டுனர்கள். இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

வயதானவர் என்று கூட பார்க்காமல் அவரை கீழே தள்ளி தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அருகிலேயே காவல் நிலையம் இருக்கிறது . மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தத்தில் , போலீசார் மட்டும் அந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தால் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதனிடையே வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வேகமாக பரவி வருவதால், குறிப்பிட்ட ஆட்டோ டிரைவர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications