"பாரதி கண்ட புதுமைப் பெண்" மின் வாரிய களப்பணியாளர் தகுதி தேர்வில் பெண்களும் கம்பம் ஏறி சாதனை!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் மின் களப்பணியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில், பெண்கள் மின்கம்பத்தில் ஏறியும், இரும்புத் தளவாடங்களைத் தூக்கிச் சென்றும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

அதிலும் குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆன ஒரு பெண்ணும் கம்பத்தில் ஏறி, ஆண்களுக்கு நிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.

Coimbatore women climb electric poles

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் களப்பணியாளர் பணிக்கான முதல் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கோவை டாடாபாத்தில் உள்ள மின் பகிர்மானக் கழக அலுவலக வளாகத்தில் உடல் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது.

கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 356 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற முதல் நாள் தேர்வுக்கு 150 பேர் அழைக்கப்பட்ட நிலையில், 59 பெண்கள் உட்பட 139 பேர் பங்கேற்றனர்.

இரும்புத் தளவாடங்கள்

இந்தத் தேர்வில் இரும்புத் தளவாடங்களைத் தூக்கிச் செல்வது, பழுது பார்க்கும் கருவிகளை இடுப்பில் கட்டிக்கொண்டு மின்கம்பத்தில் ஏறுவது உள்ளிட்ட பணிகள் இடம்பெற்றன. மின்கம்பத்தில் கால் வைப்பதற்கான கருவியைப் பொருத்தி, இடுப்பில் கயிற்றைக் கட்டிய பின் கீழே இறங்க வேண்டும்.

Coimbatore women climb electric poles

8 நிமிடங்கள்தான் டைம்

இந்தப் பணிகளை எட்டு நிமிடங்களுக்குள் முடிப்பவர்கள் உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். தப்பி தவறி அவர்கள் கீழே விழுந்தாலும் காயங்கள் ஏற்படாதவாறு, கீழே தேங்காய் நார்கள் மெத்தை போல் விரிக்கப்பட்டிருந்தன.

பச்சிளம் குழந்தையின் தாய்

இந்த நிகழ்வுக்கு பவானி அருகே ஆப்பக்கூடல் ஊத்துப்பூண்டியை சேர்ந்த பெண் ஒருவர், பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை தனது தாய், கணவரிடம் ஒப்படைத்துவிட்டு மின் கம்பம் ஏறும் தேர்வில் அசத்தினார். இது போன்ற ஆபத்தான மற்றும் சவாலான மின் களப்பணியில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றது ஆச்சரியமாக இருந்தது.

புதுமைப் பெண்

மகாகவி பாரதியாரின் புகழ்பெற்ற "புதுமைப் பெண்" பாடலில் இடம் பெற்ற "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!" என்ற வரிகள் நினைவுக்கு வந்தன.

இவ்வாறு ஆபத்தான கம்பங்களை ஏறிய பெண்களின் திறமையை மாவட்ட ஆட்சியர்களும் மின்வாரிய உயரதிகாரிகளும் பார்வையிட்டு அவர்களை பாராட்டினர்.

கால் பதிக்காத துறை இல்லை

இன்று பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என சொல்லும் அளவுக்கு எல்லா துறைகளிலும் சாதனை மங்கைகளாக திகழ்ந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் ஆண்களுக்கானது என சொல்லப்பட்ட சவாலான பணிகளையும் பெண்கள் தங்களின் மன தைரியத்தால் வென்றெடுக்கிறார்கள்.

விமான படை டூ கப்பல் படை

இந்திய விமான படையில் ரஃபேல், சுகோய் போன்ற அதி நவீன போர் விமானங்களை பெண்கள் இயக்கி சாதனை படைத்துள்ளனர். அது போல் உலகிலேயே மிக உயரமான அதே நேரம் கடுமையான பனிமலையிலும் பெண் ராணுவ அதிகாரி பணியமர்த்தப்பட்டு சாதனை புரிந்தார். அது போல் போர்க் கப்பல்களை தலைமை தாங்கும் பணிகளிலும் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

விண்வெளி டூ விவசாயம்

பெண்கள் விண்வெளி துறைகளிலும் சாதனை படைத்துள்ளனர். சந்திரயான், ஆதித்யா விண்வெளி திட்டங்களில் ஈடுபட்டதன் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்த பெண்களும் இருக்கிறார்கள். அது போல் தீயணைப்புத் துறை, நிலக்கரி சுரங்கங்கள், கனரக வாகனங்களை இயக்குதல், மாயனங்களில் பராமரிப்பு பணிகள், இறுதி சடங்குகளை செய்தல், விவசாய பணிகள் உள்ளிட்ட துணிச்சலான பணிகளையும் செய்து வருகிறார்கள். கோயில்களில் ஓதுவாராகவும் இருந்து வருகிறார்கள்.

இதன் மூலம் பாரதி கண்ட புதுமைப் பெண் கனவை தற்போது நனவாக்கியுள்ளனர் என்றே சொல்லலாம். பெண்கள் என்றால் சமைப்பது, ஏசி அறையில் அரட்டை அடிப்பது, உடலுக்கு நோகாத வேலைகளை செய்வது என்ற பிம்பத்தை மாற்றி கடும் உடலுழைப்பு போடும் பணிகளிலும் அசாத்திய சாதனைகளை படைத்து வருகிறார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் மின்வாரியத்தில் கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு தற்போது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனினும் இனி வரும் காலங்களில் இந்த பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

தகுதிகள் என்ன?

இந்த பணிக்கு கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீஷியன், வயர்மேன் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 வயது முதல் அதிகபட்சம் 37 வயது வரை அவரவரின் பிரிவினருக்கேற்ப இருத்தல் வேண்டும்.

www.tangedc.gov.in என்ற இணையதளத்தில் வேலைவாய்ப்பு என இருக்கும். அதில் களப்பணிக்கான அறிவிக்கையை படித்து தெரிந்து கொண்டு, அதிலேயே விண்ணப்பிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+