கோவை தெற்கு தொகுதி வெற்றிக்கும் செக்.. செந்தில் பாலாஜி தலையில் பேரிடி..!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கி தருவதாக மோசடி, டாஸ்மாக் மோசடி, டிரான்ஸ்பாமர் கொள்முதல் மோசடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த வழக்கிலும் அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் தொடர்புடைய இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தினார்கள். அந்த அதிர்ச்சிக்குள் கோவை தெற்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் மோசடி குறித்து அவர் மீது பகீர் புகார் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், "நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கின்ற ஜனநாயக விரோத செயல் வெளிப்படையாக தங்கு தடையின்றி நடைபெற்றது. தேர்தல் ஆணையமும், காவல்துறையும் இதை வேடிக்கை மட்டுமே பார்த்தது. இதை தடுப்பதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்த புகார்கள் மற்றும் அதன் மீது எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக மனு அளித்திருந்தோம்.

Senthil balaji

48 புகார்கள் 2 வழக்குகள்

இதில் பல சட்டமன்ற தொகுதிகளின் தகவல்களைப் பெற்றுள்ளோம். கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற தேர்தல் குறித்த கோப்புகளை கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் இன்று ஆய்வு செய்தோம். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் ஒவ்வொரு ஓட்டுக்கும் 5000 ரூபாய் கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் அனைத்து வாக்காளர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் குறைந்த அளவு புகார்களே வந்தது. இந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுத்திருந்தாலே இந்தத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

நான் பார்வையிட்டதில் ஓட்டுக்கு பணம் கொடுத்தது குறித்து 48 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு புகார்களுக்கு மட்டும் முதல் தகவல் அறிக்கையும் ( FIR ) ஒரு புகாருக்கு ரசீது (CSR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு புகார்கள் ராமநாதபுரம் காவல் நிலையத்திலும், ஒரு புகார் வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று வழக்குகளிலும் கரூரைச் சேர்ந்த நபர்களே குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் கம்பெனியின் பின்னணி

இது மட்டும் இல்லாமல் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் கொடுத்ததாக ஒன்பது புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற 45 புகார்கள் எந்த குற்றமும் நடக்கவில்லை என்று பதிவு செய்துள்ளார்கள். ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக வந்த இந்த புகார்கள் அனைத்தும் ஏப்ரல் மாதம் 19, 20, 21 ஆம் தேதிகளில் மட்டும் வந்துள்ளது. பொய்யான குற்றச்சாட்டுகள் எனில் இதற்கு முன்பே பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அனைத்து தொகுதிகளிலும் 19, 20 ,21 ஆகிய தேதிகளில் மட்டுமே இந்த புகார்கள் வந்திருக்கிறது.

இந்த புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனில், இது தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்ட சதி என்பதை ஆதாரப்பூர்வமாக கூறுகிறோம். புகார்களில் உண்மை இல்லை என்று பதிவு செய்த அதிகாரிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் உள்ள அனைவரும் கரூரை சேர்ந்தவர்கள் என்பதால் தொகுதி முழுவதும் திட்டமிட்டு நிதானமாக தெளிவாக தேர்தல் ஆணையம் காவல்துறை என்று எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பணம் கொடுக்கப்பட்டது நிரூபணம் ஆகிறது.

தகுதி நீக்கம்

தேர்தலில் எந்த முறைகேடு வேண்டுமானாலும் செய்து வெற்றி பெற்றுவிட்டால் நம்மை எதுவும் செய்ய இயலாது என்ற வேட்பாளர்களின் ஆணவத்தை உடைக்கவும் நேர்மையான ஜனநாயகமான தேர்தல் இனிமேல் நடக்க வேண்டும் என்றால் இந்த முறைகேடுகளை தேர்தல் ஆணையம் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் ஒரு விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை செய்து, செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம் செய்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+