கோவையில் டாஸ்மாக் கடை.. ஒன்றிணைந்து போராட்ட களத்தில் குதித்த பாஜக- காங்கிரஸ்!
கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸட் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து மக்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சோமனூர் செல்லும் சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த டாஸ்மாக் கடை வேறு ஒரு பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் சில ஆண்டுகளாக ஏற்கெனவே கடை இருந்து எதிர்ப்பின் காரணமாக நீக்கப்பட்ட பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகளை டாஸ்மாக் நிர்வாகம் தொடங்கியது.

அரசியல் கட்சி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அரசியல் கட்சியினர் பொது மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, கம்யூனிஸ்ட், கொங்கு நாடு, மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து சோமனூர் சாலையில் புதியதாக மதுக்கடை கொண்டு வருவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குழந்தைகள் நல மருத்துவமனை
குழந்தைகள் நல மருத்துவமனை, பள்ளிகள், சர்ச் போன்றவை அமைந்துள்ள இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என ஆர்ப்பாட்டத்தின் போது அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். கோவை மாவட்ட ஆட்சியர் டாஸ்மார் நிர்வாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை என சொல்லப்படுகிறது.

மதுக்கடை
மதுக்கடை இந்த இடத்தில் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த ஆர்ப்பாடடத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மதுக்கடைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது வேண்டாம், வேண்டாம், மதுக்கடை வேண்டாம் என முழக்கங்கள் அடங்கிய பேனர்கள் இருந்தன. மேலும் அந்த பேனரில் ஒரு பக்கம் காந்தி படமும் இன்னொரு பக்கம் காமராஜர் படமும் அமைக்கப்பட்டிருந்தது.

கோவையில் களமிறங்கிய கட்சிகள்
கோவையில் பொதுமக்கள் சார்ந்த ஒரு பிரச்சினைக்கு பாஜகவும் காங்கிரஸ் இணைந்து குரல் கொடுத்துள்ளது. அது போல் திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தவறு எனும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றிணைந்து களமிறங்கியுள்ளது. இது மக்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும் என்றே கருதப்படுகிறது.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன?












Click it and Unblock the Notifications