கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள்
கோவை: வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி இந்த முறை கோவை மாவட்டத்தில் 3 சட்டசபை தொகுதிகளை குறிவைத்து காங்கிரஸ் காய் நகர்த்தி வருகிறது. இந்த தொகுதிகளை ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் கேட்பதாக கூறப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
நீண்ட இழுபறி, மோதலுக்கு பிறகு திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு, 41 சட்டசபை தொகுதிகளை கேட்டது. இதற்கு திமுக ஒப்புக்கொள்ளவில்லை. இது இருகட்சிகளுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியது.

இறுதியாக காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக வழங்கியது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 18 இடங்களில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ்க்கு 28 தொகுதி
இந்த முறை 28 தொகுதிகளில் காங்கிரஸ் களமிறங்குகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா காலமானார். இதையடுத்து இடைத்தேர்தலில் அவரது தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் காலமானதை தொடர்ந்து திமுக அந்த தொகுதியை கைப்பற்றியது. திமுக சார்பில் சந்திரகுமார் எம்எல்ஏவாக உள்ளார். இந்த முறையும் திமுக சார்பில் அவர் களமிறங்க திட்டமிட்டுள்ளார்.
கோவை மீது கண்வைக்கும் காங்கிரஸ்
இதனால் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இப்படியான சூழலில் தான் இந்த 17 தொகுதிகளை மீண்டும் திமுகவிடம் காங்கிரஸ் கோரியுள்ளது. ஆனால் திமுகவோ 7 தொகுதிகளை வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. அதன்படி விருத்தாச்சலம், ஊட்டி, அறந்தாங்கி, நாங்குநேரி, சிவகாசி, தென்காசி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் அதனை திமுக வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது.
இது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புதிய பிரச்சனையாக மாறி உள்ளது. இப்படியான சூழலில் தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி தங்களுக்கு சாதகமான பிற தொகுதிகளை தேட தொடங்கி உள்ளது. அந்த வகையில் காங்கிரஸின் பார்வை கோவை மாவட்டத்தை நோக்கி திரும்பி உள்ளது.
எந்தெந்த தொகுதிக்கு காங்கிரஸ் குறி
இதுபற்றி மூத்த காங்கிரஸ் தலைவர் கூறுகையில், ''கோவையில் நாங்கள் 3 தொகுதிகளை குறிவைத்துள்ளோம். இதில் குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலாவது போட்டியிட விரும்புகிறோம். கடந்த தேர்தலை பார்க்கும்போது எங்களுக்கு கோவையில் நல்ல ஆதரவு உள்ளது'' என கூறியுள்ளார். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி கோவை தெற்கு, கோவை வடக்கு, சூலூர் உள்ளிட்ட 3 சட்டசபை தொகுதிகளை குறிவைத்துள்ளது.
கோவை தெற்கு நிலவரம் என்ன?
இதில் கோவை தெற்கு தொகுதியில் 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 3வது இடம் பிடித்தார். இந்த தொகுதியில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாஜகவின் வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று வென்றார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 51,481 வாக்குகள்பெற்று தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 41,383 ஓட்டுகள் வாங்கினார். இதனால் இந்த தொகுதியை மீண்டும் தங்களுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் உரிமை கோர உள்ளதாம்.
அதேவேளையில் கடந்த முறை இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் கமல்ஹாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றார். இதனால் திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யமும் இந்த தொகுதியை கேட்டு வருகிறது. அதேபோல் கோவை வடக்கு, சூலூர் சட்டசபை தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி குறிவைத்துள்ளது.
கோவை வடக்கு நிலவரம்
அதன்படி கோவை வடக்கு தொகுதியில் அதிமுகவின் அம்மன் கே அர்ஜுனன் எம்எல்ஏவாக உள்ளார். இவர் கடந்த தேர்தலில் 81,454 ஓட்டுகள் வாங்கி வென்றார். திமுகவின் சண்முக சுந்தரம் 77,453 ட்டுகள் வாங்கி 4,001 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். நூலிழையில் தான் திமுக வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில் அதனை திமுக, காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சூலூர் தொகுதி நிலவரம்
அதேபோல் சூலூர் சட்டசபை தொகுதியை எடுத்து கொண்டால் எம்எல்ஏவாக விபி கந்தசாமி உள்ளார். இவர் அதிமுகவை சேர்ந்தவர். கடந்த தேர்தலில் 1,18,968 ஓட்டுகள் பெற்றார். இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் செல்வம் காளிச்சாமி போட்டியிட்டு 87,036 வாக்குகள் பெற்றார். இந்த தொகுதியை திமுக கூட்டணியில் மீண்டும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கேட்பதாக கூறப்படும் நிலையில் காங்கிரஸ் குறிவைத்துள்ளது. இதனால் திமுக கூட்டணியில் கோவையில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
அண்ணியின் கெத்து சிரிப்பு.. எரிச்சலான விசிக.. விருதாச்சலத்தில் முகம் மாறிய பிரேமலதா.. நடந்தது என்ன? -
எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்! -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
அழகர்சாமி நாயுடு பேரன் என்பதால் விஜய பிரபாகரனுக்கு ஆதரவு! ஜாதி அரசியலை கையிலெடுத்த மாணிக்கம் தாகூர் -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி! -
Villivakkam: ஜவ்வாக இழுக்கும் தொகுதி பிரச்சனை! ஆளும் கட்சிக்கு நெருக்கடியா! ஆதவுக்கு பாசிட்டிவ்? -
நான் ஏன் முதல்வராக ஆகக்கூடாது என்று சொல்கிற காலம் வரும்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்!












Click it and Unblock the Notifications