கூலிகள் வயிற்றிலடிக்கும் கூலி டிக்கெட்.. தியேட்டர்காரங்களே ப்ளாக்ல விக்குறாங்க! யார் தான் கேக்குறது?
கோவை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கூலி திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தங்கம் திரையரங்கில் திரையரங்க நிர்வாகமே தியேட்டருக்கு பின்புறம் உள்ள இடத்தில் 190 ரூபாய் டிக்கெட்டை 400 ரூபாய்க்கு விற்பனை செய்து வரும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்துடன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைகிறார் என்ற அறிவிப்பு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பான் இந்தியா படமாக கூலி அறிவிக்கப்பட்டது.
சன் பிக்சர்ஸ் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். ரஜினிகாந்த் உடன் நடிகர்கள் நாகார்ஜுனா, ஆமீர் கான், உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கமலஹாசனின் மகள் சுருதிஹாசன் படத்தில் முதன் முதலாக ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார்.

படத்தின் டீசர், டைட்டில் கார்டு, மற்றும் பாடல்கள் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது குறிப்பாக மோனிகா பாடல் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிக பிரம்மாண்டமாக டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்தியராஜ், ஆமீர்கான் உள்ளிட்ட பலர் இந்த வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கூலி திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் மாலை படத்திற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியது. பல்வேறு திரையரங்குகளிலும் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கோவை பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் அமைந்துள்ள தங்கம் திரையரங்கில் திரையரங்க நிர்வாகமே டிக்கெட்டை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது.
திரையரங்கின் அருகே உள்ள காலி இடத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யும் முகாம் ஒன்றை அமைத்துள்ள திரையரங்க நிர்வாகம் 190 ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டை தனி ஊழியர் மூலம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இன்று அந்த டிக்கெட்டை வாங்க சென்ற ரசிகர் ஒருவர் இது குறித்த காட்சியை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்த சூழலில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
குறிப்பாக டிக்கெட் வாங்க வருபவர்கள் பணமாக கொண்டு வந்து டிக்கெட் வாங்க வேண்டும் என்றும் டிக்கெட்டை போட்டோ வீடியோ எடுக்க கூடாது என்றும் திரையரங்க ஊழியர் கூறுவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு திரைப்படமானாலும் வரையறுக்கப்பட்ட விலைக்கு மேல் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது என விதிமுறை உள்ள நிலையில் கூலி திரைப்படத்தின் டிக்கெட் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சம்பவம் ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications