கல்யாண ஜோடிக்கு தட்டு நிறைய ’காஸ்ட்லியான’ பரிசு.. அதை பத்திரமா வைக்க ஃப்ரிட்ஜ் - கோவையில் விநோதம்!
கோவை : தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், திருமண விழாவில் மணமக்களுக்கு தக்காளி பரிசாக அளிக்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமையலில் அத்தியாவசியமான தக்காளியின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து 90 ரூபாய்க்கும் அதிகமாக தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் தக்காளி மற்றும் ஃப்ரிட்ஜை மணமக்களுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பரிசாக வழங்கி அசத்தியுள்ளனர்.

கோவையில் திருமணம்
கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தெற்கு நகர இளைஞரணி பொருளாளராக இருப்பவர் இரும்பு கடை அக்கீம். இவரது மகள் அப்சானாவிற்கும் ஹாரிஸ் என்பவருக்கும் இன்று கோவை குனியமுத்தூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் யுவராஜ் , தெற்கு நகர இளைஞரணி தலைவர் பைசல்,செயலாளர் முகம்மது அலி உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆச்சர்ய பரிசு
இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி நிர்வாகிகள் திடீரென மணமக்களுக்கு தக்காளி மற்றும் குளிர்சாதனப்பெட்டி ஆகிய பரிசுகளை வழங்கி ஆச்சரியப்படுத்தினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத மணமக்களும் அங்கு கூடியிருந்தவர்களும் ஆச்சர்யமடைந்தனர். காஸ்ட்லியான தக்காளியை பாதுகாக்க ஃப்ரிட்ஜ் வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்தவர்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

தக்காளி விலை
தக்காளியின் விலை சில மாதங்களுக்கு முன்னர் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. பின்னர் சில வாரங்களுக்கு முன்பு குறைவான விலையில் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய்க்கும், புறநகர் பகுதிகளில் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயில் மற்றும் அசானி புயல் போன்றவற்றால் தக்காளி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தக்காளி விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

திருமண பரிசு
இந்நிலையில் கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. ஏற்கனவே தக்காளி விலை உயர்வின் போதும், வெங்காயம் விலை கடுமையாக அதிகரித்தபோதும் விஜய் ரசிகர்கள் இதேபோல திருமண விழாவில் மணமக்களுக்கு தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைப் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications