ஓரினச்சேர்க்கை.. "உன்ன பார்க்க முடியுமா ப்ளீஸ்".. டீனிடம் சிக்கிய மாணவர்.. இப்ப மானமே கப்பலேறிடுச்சு
கோவை: "உடலுறவு வைத்தால்தான் பாஸ் பண்ணுவே" என்று மாணவனுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார் கல்லூரி டீன்.. இதுகுறித்து மாணவர் பரபரப்பு புகார் தந்துள்ள நிலையில், அந்த மாணவரிடம் சமரச பேச்சில் டீன் ஈடுபடும் ஆடியோவும் லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கோவையில் பிரபல தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் டீன் மற்றும் உயிர்வேதியல் துறை தலைவராக இருந்து வருபவர் மதன்சங்கர்.
இவர் மீது பாலியல் புகார் கிளம்பி உள்ளது.. இவரிடம் முனைவர் பட்ட படிப்பு மேற்கொள்ளும் மாணவர் ஒருவர், இந்த பாலியல் புகாரை, பாரதியார் பல்கலை கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் ஆகியவற்றில் அளித்துள்ளார்.

பாலியல் புகார்
இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள ஐசிசி கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து இருப்பது உறுதியானது. இதைதொடர்ந்து கல்லூரியின் டீன் மற்றும் உயிர்வேதியல் துறை தலைவரான மதன்சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும், ஐசிசி கமிட்டி விசாரணை நடத்திய பின்பும் கல்லூரி டீன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவர் புகார் தெரிவித்துள்ளார்..

பாலியல் தொல்லை
கடந்த ஒன்றரை வருட காலமாகவே, பேராசிரியர் பாலியல் ரீதியாக அத்துமீறினார் என்றும், மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பேசும் வழக்கம் கொண்ட அந்த பேராசிரியர், அவர் சொல்லும்படியாக கேட்காமல் இருந்தால் கையெழுத்து போட மாட்டார் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, அவர் ஆசிரியர் பணியிலேயே நீடிக்க கூடாது, ஏற்கனவே அவரால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இனியும் பிற மாணவர்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது மாணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

நிர்வாகம்
கல்லூரியில் முதல்வருக்கு அடுத்த நிலையில் இருந்த டீன் மதன்சங்கர், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி நடவடிக்கைக்கு உள்ளாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் சொல்லும்போது, முதல் கட்ட விசாரணை இப்போதுதான், நடந்து முடிந்துள்ளது.. அடுத்தகட்ட விசாரணைக்கு பின்பு சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆடியோ லீக்
இதனிடையே, ஐசிசி கமிட்டி விசாரணை அறிக்கையும், பாதிக்கப்பட்ட மாணவருக்கும், கல்லூரி டீனும் இடையே நடைபெற்ற ஆடியோவும் லீக் ஆகியுள்ளது.. இந்த ஆடியோவில், மாணவரை, பேராசிரியர் மதன்சங்கர் சமரசபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவது பதிவாகி இருக்கிறது. மேலும், விசாரணை அறிக்கையில் முனைவர் பட்ட மாணவரை, இந்தோனேசியா, சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று கல்லூரி டீன் மதன்சங்கர் பாலியல் டார்ச்சர் தந்துள்ளதும், அதில் உறுதியாகி உள்ளது.. அந்த ஆடியோவில் பேராசிரியரும் - மாணரும் பேசிக் கொள்வது இதுதான்:












Click it and Unblock the Notifications