கோவையில் உட்கார்ந்த இடத்திலேயே 2.5 கோடி சம்பாத்தித்த தீபக்.. 90 கோடி ஆசைப்பட்டவர் ஏமாற்றம்
கோவையில் ரியல் எஸ்டேட் அதிபருடன் நன்கு பழகிய தீபக் என்பவர், ரூ.300 கோடி வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாகவும், அந்த பணம் ரிசர்வ் வங்கியில் உள்ளதாகவும் தெரிவித்தாராம். மேலும் அந்த பணத்தை எடுக்க வேண்டும் என்றால் வரி செலுத்த வேண்டும் என்றும், அதற்கு உதவி செய்தால் ரூ.300 கோடியில் 30 சதவீத தொகையை கமிஷனாக கொடுப்பதாக கூறினாராம். இதை நம்பி 2.5 கோடி ரியல் எஸ்டேட் அதிபர் கொடுத்தாராம். ஆனால் அவர் நினைத்தபடி 30 சதவீத கமிஷனான 90 கோடி கிடைக்கவில்லை. மாறாக மொத்தமாக 2.5 கோடியும் ஏமாந்து விட்டாராம். இந்த விவகாரத்தில் தீபக் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இன்றைக்கு மக்களை ஏமாற்றி பயணம் பறிக்க பலர் நூதன முறைகளை கையாளுகிறார்கள். நம்ப முடியாத ஆஃபர்களை தருகிறார்கள். 1 கோடி கொடுத்தால் 10 கோடி, ஒரு லட்சம் கட்டினால் மாதம் 12000 வட்டி என்று அறிவிக்கிறார்கள். இதனை உண்மை என்று நம்பி பணத்தை முதலீடு செய்து அல்லது கொடுத்து மக்கள் ஏமாறுகிறார்கள். சதுரங்க வேட்டை பட பாணியில் நடந்த ஏமாற்றம் ஒன்று கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் கோவூர் பகுதியைச் சேர்ந்த 56 வயதாகும் ரவி, ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அண்மையில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறுகையில், கோவை மாவட்டம் பட்டணம் பகுதியைச் சேர்ந்த முத்து, அவரது மகன் தீபக் (27) ஆகியோருடன் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் ஏற்பட்டு பழகி வந்தோம். முத்து கடந்த 2022-ம் ஆண்டு இறந்து விட்டார்.
இதற்கிடையே தீபக் என்னை அணுகி தனது அப்பாவிற்கு ரூ.300 கோடி வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாகவும், அந்த பணம் ரிசர்வ் வங்கியில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அந்த பணத்தை எடுக்க வேண்டும் என்றால் வரி செலுத்த வேண்டும் என்றும், அதற்கு உதவி செய்தால் ரூ.300 கோடியில் 30 சதவீத தொகையை கமிஷனாக கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
அதற்கு ஆதாரமாக போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை காண்பித்தார். இதனை நம்பிய நான் அவருக்கு பல்வேறு கட்டங்களாக ரூ.2.5 கோடி கொடுத்தேன். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர் கூறியபடி கமிஷன் தொகையை தரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் எனது பணத்தை மட்டுமாவது தரும்படி கேட்டேன்.
ஆனால் தீபக், அவரது தாயார் ஷாலினி, சகோதரி ரேஷ்மா, உறவினர் ராஜா ஆகியோர் எனது பணத்தை தராமல் ஏமாற்றியதுடன், என்னை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து ரூ.2.5 கோடியை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த புகாரின் பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக், ஷாலினி, ரேஷ்மா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications