அண்ணாமலையின் மூளை.. நாங்கள் வியந்து போகிறோம்.. இனி ஆட்டுக்குட்டி என்று கூப்பிடாதுங்க.. யார்னு பாருங்க
கோவை: இன்னொருமுறை யாரையுமே தரக்குறைவாக விமர்சனம் செய்யாதீங்க.. அப்படி செய்தால், நாங்கள் என்ன விமர்சனம் செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்கிறீர்கள்" என்று கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையை பாடலாசிரியர் விமர்சித்துள்ளார்.
நேற்றைய தினம் பல்லடத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்...

ஆனால், கமல் வருவதற்கு முன்னதாக., பாடலாசிரியர் சினேகன் அங்கிருந்த மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். உடனே அங்கிருந்தவர்கள், "ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி" என்று கோஷம் எழுப்பினர்.
சிநேகன்: அப்போது பேசிய சினேகன், "தயவு செய்து இனிமேல் ஆட்டுக்குட்டி என்று சொல்லாதீங்க.. ஆட்டுக்குட்டிக்கென்று ஒரு மரியாதை இருக்கு.. ஆட்டுக்குட்டி மீது பெரிய மதிப்பு உண்டு. அதை கெடுத்துட வேண்டாம்..
பச்சை இலையை பறித்து போட்டால் பண்போடு அந்த ஆட்டுக்குட்டிகள் பின்னால் வரும்.. எந்த ஆட்டுக்குட்டியும், கொண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணாது.. தன்னுடைய குட்டிகளுக்கு ஒழுங்காக பால் கொடுக்கும்... யார் எஜமான் என்பது ஆட்டுக்குட்டிக்கு நன்றாகவே தெரியும். அடுத்தவர்களின் வீட்டை தாவி பார்க்காது... அடுத்தவர்களை போட்டு கொடுக்காது.
தனிமனித விமர்சனம்: அரசியலில் தனிமனித விமர்சனம் கூடாது என்று எங்கள் தலைவர் சொல்லிஉள்ளார். 4 நாளைக்கு அண்ணாமலை அவர்கள் எங்கள் தலைவர் கமல்ஹாசனுக்கு மூளை இருக்கிறதா? பரிசோதனை செய்யுங்கள் என்கிறார்..
ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றாலோ, அந்த பொருள் மீது ஆசை இருந்தாலோதான் அது குறித்து தொடர்ச்சியாக நாம் பேசுவோம். உங்களுக்கு மூளை இல்லை என்பதற்காக எங்கள் தலைவரை பற்றி சொன்னீர்களா? அல்லது நீங்கள் படித்த 20 ஆயிரம் புத்தகத்தில் மூளை குறித்து ஒரு புத்தகம் கூட இல்லையா? மூளையை பற்றி பேச, மூளை இருக்கணும் இல்லையா? யாரை பற்றியுமே பேசுவதற்கு ஒரு அருகதை இருக்கணும் இல்லையா?
வெப்பம்: கோவையில் வெப்பம் அதிகரிக்க திமுக தான் காரணம் என்றாரே, அப்படிப்பட்ட அண்ணாமலையின் மூளையை பார்த்து ஆச்சரியப்பட்டு வியந்து போகிறோம். அரசியல் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு பண்பாட்டுக்கு கட்டுப்பட்டு நியாயமான முறையில் நாங்கள் விமர்சனம் செய்கிறோம்.
இன்னொருமுறை யாரையுமே தரக்குறைவாக விமர்சனம் செய்யாதீங்க.. அப்படி செய்தால், நாங்கள் என்ன விமர்சனம் செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்கிறீர்கள்" என்றார் சினேகன்.
-
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
ஆரம்பமே இடிக்குதே.. திமுக லிஸ்ட்டில் வந்து சேர்ந்த தவெக.. அமித் ஷா சொன்னதை கேட்டீங்களா -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications