அண்ணாமலை தோற்றது தெரியும்.. வானதி கோவையில் சைலண்ட்டாக செய்த சம்பவம் தெரியுமா? நீங்களே பாருங்க!
கோவை; 2024 லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் சத்தமே இல்லாமல் சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.
கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை 118068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 568200 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக அண்ணாமலை 450132 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சிங்கை ராமசந்திரன் 236490 வாக்குகள் பெற்றுள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதி இந்தியாவில் அதிகம் கவனிக்கப்பட்ட தொகுதி. இந்திய அளவில் கூகுள் தொடங்கி டிவி வரை பல இடங்களில் இந்த தொகுதி பற்றி தேடப்பட்டது. ஊடகங்களில் இருக்கும் எஸ்இஓ இன்ஜினியர்களுக்கு தெரியும்.. இந்த தொகுதி எவ்வளவு முக்கியமாக இருந்தது என்று. அதற்கு காரணம் அண்ணாமலை.
அண்ணாமலை தமிழ்நாட்டை தாண்டி தனக்கு என்று உருவாக்கிய பிம்பம் பல்வால் தேவனுக்கு பின் இருக்கும் பாகுபலி சிலை போன்றது. தேசிய அளவில் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்துவிட்டேன் என்று அண்ணாமலை சென்ற இடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் அவரின் கோவை தொகுதியிலேயே பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது,
கோவை தோல்வி: 2024 லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் சத்தமே இல்லாமல் சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.
முன்னதாக கோவையில் வானதி சீனிவாசன் அண்ணாமலைக்கு எதிராக உள்ளார். அங்கே பெரிய உள்ளடி போய்க்கொண்டு இருக்கிறார். வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். கட்சியை விட்டு நீக்கிவிடுவார்கள். அரசியலில் இதெல்லாம் சாதாரணம் இல்லை.
நீங்கள் ஆளுமையாக இருக்கும் ஏரியாவில் வேறு ஆள் வந்து நின்றால் விட மாட்டார்கள். மோடி மீண்டும் வந்தால் இவர் அமைச்சர் ஆகும் வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்க இவரின் லோக்கல் அரசியல் காலி ஆகலாம். இதை எல்லாம் வானதி யோசித்து பார்ப்பார். அண்ணாமலையை எப்படி வானதி விடுவார். வானதி அண்ணாமலையை கவிழ்க்க பார்ப்பார்.
அண்ணாமலைக்கு கள நிலவரம் சரியாக இல்லை. அங்கே வானதி அண்ணாமலைக்கு எதிராக பணிகளை செய்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.
எல்லாம் பொய்: ஆனால் வானதி சீனிவாசன் அதை எல்லாம் பொய்யாக்கி உள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் சத்தமே இல்லாமல் சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.
அதன்படி அண்ணாமலைக்கு வந்த மொத்த வாக்குகளில் அதிகமான வாக்கு சதவிகிதம் கோவை தெற்கில் வானதி சீனிவாசன் உள்ள தொகுதியில் இருந்துதான் வந்துள்ளது.
பல்லடம் மொத்த வாக்குகள் 268295 அண்ணாமலைக்கு வந்த வாக்குகள் 76333 வாக்கு சதவிகிதம் 28.45%
சூலூர் மொத்த வாக்குகள் 244875 அண்ணாமலைக்கு வந்த வாக்குகள் 75501 வாக்கு சதவிகிதம் 30.83%
கவுண்டம்பாளையம் மொத்த வாக்குகள் 312718 அண்ணாமலைக்கு வந்த வாக்குகள் 104549 வாக்கு சதவிகிதம் 33.43%
கோயம்புத்தூர் (வடக்கு) மொத்த வாக்குகள் 198641 அண்ணாமலைக்கு வந்த வாக்குகள் 71174 வாக்கு சதவிகிதம் 35.83%
கோயம்புத்தூர் (தெற்கு) மொத்த வாக்குகள் 144990 அண்ணாமலைக்கு வந்த வாக்குகள் 53579 வாக்கு சதவிகிதம் 36.95%
சிங்காநல்லூர் மொத்த வாக்குகள்196658 அண்ணாமலைக்கு வந்த வாக்குகள் 66472 வாக்கு சதவிகிதம் 33.80% ஆகும்.
இதில் வானதி சீனிவாசன் உள்ள கோயம்புத்தூர் (தெற்கு) தொகுதியில்தான் மொத்த வாக்குகள் 144990 அண்ணாமலைக்கு வந்த வாக்குகள் 53579 வாக்கு சதவிகிதம் 36.95% அடிப்படையில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளன.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications