செந்தில் பாலாஜி மீது நம்பிக்கையாக இருக்கும் திமுக.. கோவையில் விஜய் மேஜிக்கால் நடக்கும் மாற்றம்?
கோவை: சட்டசபைத் தேர்தலில் கோவையில் திமுகவுக்கு 4 தொகுதிகள் சாதகமாக அமைந்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். கோவை தெற்கு, கோவை வடக்கு, கிணத்துக்கடவு மற்றும் வால்பாறை ஆகிய 4 தொகுதிகளும் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சிங்காநல்லூர் மற்றும் சூலூர் ஆகிய தொகுதியில் இழுபறி நீடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துவிட்டது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக கொங்கு மண்டலத்தில் அதிக வெற்றியை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. 2021 சட்டசபைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவே அதிக தொகுதிகளை கைப்பற்றியது. குறிப்பாக கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகவே வென்றது. ஒன்றில் கூட திமுக வெல்லவில்லை.

இதனால் கடந்த 5 ஆண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு திமுக அதிகளவில் முக்கியத்துவம் அளித்தது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமித்து பணிகளை திமுக முடுக்கிவிட்டது. அதற்கேற்ப கோவையில் மாநகராட்சி மற்றும் லோக்சபா தேர்தலில் திமுக கொடி நாட்டியது. இருப்பினும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக எளிதாக விட்டுக் கொடுக்காது என்று பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப கோவையில் அதிமுக தீவிரமாக களமாடியது. அதுமட்டுமல்லாமல் தவெகவும் கோவையில் கணிசமான வாக்குகளை கைப்பற்றும் என்று சொல்லப்படுகிறது. திமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடியாகவே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வைக்கப்பட்டார்.
இதனால் கோவை களம் சூடுபிடித்தது. தற்போது வாக்குப்பதிவு நடந்திருக்கும் நிலையில், ஓரளவிற்கு வெற்றியாளர்களை பலரும் கணித்து வருகின்றனர். அதன்படி கோவையில் 4 தொகுதிகளில் திமுக வெல்லும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். கோவை தெற்கு, கோவை வடக்கு, கிணத்துக்கடவு மற்றும் வால்பாறை ஆகிய 4 தொகுதிகளில் திமுகவே வெல்லும் என்று சொல்லப்படுகிறது.
மறுபக்கம் தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக கை ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சிங்காநல்லூர் மற்றும் சூலூர் ஆகிய தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தவெக பிரிக்கும் வாக்குகளை பொறுத்தே தெரியும். டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இழக்கும் தொகுதிகளை கொங்கு மண்டலத்தை வைத்து சரி செய்யலாம் என்று திமுக திட்டமிட்டுள்ளது.
அதற்கேற்ப கடினமான கோவை மாவட்டத்திலேயே திமுகவுக்கு ஓரளவிற்கு நம்பிக்கையான வெற்றிகள் கிடைப்பது அக்கட்சி தலைமைக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. அதேபோல் ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுக கடந்த முறையை விட கூடுதலாக சில தொகுதிகளை கைப்பற்றும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி










Click it and Unblock the Notifications