திருப்பரங்குன்றம் தேவையில்லாத பிரச்சனை.. திமுக, பாஜக அரசியல் ஆதாயம் தேடுகிறது.. தவெக அருண்ராஜ்
கோவை: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தல் களத்திற்கு தயாராகி வருகிறார்கள். தவெக தலைவர் விஜய் நாளை ஈரோடு மாவட்டம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மற்றும் விஜய் கருத்து சொல்லவில்லை என்பதை திமுக, பாஜக விமர்சனமாக முன்வைத்தன.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் பிரச்சனை தேவையில்லாத ஒன்று. இதில் திமுக, பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது என்று தவெக நிர்வாகி அருண்ராஜ் விமர்சித்துள்ளார்.
ஈரோடு தவெக பொதுக்கூட்டம் செல்வதற்காக, தவெக கொள்கைபரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "தவெக முதல் மாநாட்டில் இருந்தே பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஈரோடு பொதுக்கூட்டத்தில், பார்வையாளர்கள் அரங்கு பாக்ஸ் பாக்ஸாக பிரிக்கப்பட்டுள்ளது. குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 12 பாதுகாப்புக்காக மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளனர்.
அனுமதி கடிதம்
இந்தக் கூட்டத்திற்காக அனுமதி கொடுக்க கூடாது என காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு தான் எங்களுக்கு அனுமதி கடிதம் கிடைத்தது. திங்கள் கிழமை காலைதான் திடலுக்குள் வர அனுமதி கிடைத்தது. கடந்த 3 நாட்களாக தான் அனைத்து பணிகளையும் செய்கிறோம். ஏற்பாட்டில் உள்ள குறைகளை அரசு சொல்கிறது.
ஆனால் அதற்கு உரிய கால அவகாசம் வழங்குவதில்லை. இந்த கூட்டம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும். இதன் பிறகு அடுத்தடுத்து கூட்டங்கள் நடைபெறும். நாளைய கூட்டத்திற்கு இப்போதிருந்தே மக்கள் வரத்தொடங்கிவிட்டனர். திருவிழா கோலம் போல உள்ளது.
கடமையை செய்துவிட்டோம்
திமுக இளைஞரணி கூட்டத்திற்கு என்ன விதிமுறைகளை விதித்தார்கள் என்று பார்த்தோம். தவெக கூட்டங்களை எந்தளவுக்கு தடுக்க முடியுமோ அந்த அளவுக்கு தடுக்க முயற்சி செய்கிறார்கள். அதையெல்லாம் கடந்துதான் தான் கூட்டம் நடத்துகிறோம். எங்களது கடமைகளை நாங்கள் செய்துவிட்டோம்.
அதேபோல காவல்துறையினர் அவர்களின் பொறுப்பை சரியாக செய்ய வேண்டும். தவெக தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று கட்சி தலைமையில் இருந்து ஏற்கனவே அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நிபந்தனைகளை மீறி
காவல்துறை விதித்த நிபந்தனைகளையும் மீறி உரிய ஏற்பாடுகள் செய்துள்ளோம். இதன் பிறகு காவல்துறை தங்கள் பணியை சரியாக செய்ய வேண்டும். தலைவர் மீதுள்ள அன்பால் மக்கள் திரளாக வருகிறார்கள். கொங்கு மண்டலம் களம் சிறப்பாக உள்ளது.
இப்போதே இந்த மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகிறார்கள். அவர்கள் அனைவருமே இந்தமுறை கொங்கு பகுதியில் தவெக முழுவதுமாக ஸ்வீப் அடிக்கும் என்கிறார்கள். உரிய நேரத்தில் இந்த பகுதியை சேர்ந்த மாற்று கட்சி தலைவர்கள் தவெகவில் இணைவார்கள்.
அரசியல் ஆதாயம்
தமிழ்நாடு என்பது அனைத்து மதமும் சகோதர மனப்பான்மையுடன் இருப்பதற்கு உதாரணமாக திகழும் மாநிலம். இங்கு அனைத்து மத வழிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. ஆனால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக மற்றும் பாஜக இருவருமே அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார்கள். தமிழ்நாடு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
காவல்துறையினர் நினைத்திருந்தால் திருப்பரங்குன்றம் இவ்வகாரத்தில் பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம். மதுரை கள்ளழகர் திருவிழா ஊர்வலம்போது, இஸ்லாமியர்கள் வழிபடுவார்கள். சபரிமலை செல்லும் பக்தர்கள் அருகில் உள்ள வாவர் மசூதி செல்கிறார்கள். திருப்பரங்குன்றம் விவகாரம் தேவையில்லாத பிரச்சனை.
அண்ணாமலைக்கு பதிலடி
பிரியாணி கடையில் பிரச்சனை செய்வது, பெண் காவலர்களிடம் அத்துமீறுவது போன்ற பிரச்சனைகள் ஏதாவது எங்கள் கட்சி கூட்டங்களில் நடக்கிறதா. தலைவரை நேரில்.. அருகில்.. பார்க்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தில்தான் முண்டியடிக்கிறார்களே தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை. ரசிகர்கள் அனைவரும் தொண்டர்களாக மாறிவிட்டார்கள்.
பாஜக அண்ணாமலை கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால் இன்று இருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்திருப்பார். தவெகவில் விருப்ப மனுக்கள் உரிய நேரத்தில் பெறுவோம். எங்கள் தலைவருக்கு மக்களை சந்திப்பதில் விருப்பம் அதிகம் இருக்கிறது." என்றார்.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
தப்பு செஞ்சா அடுத்த செகண்டே பதவி காலி.. பனையூர் தவெக ஆபீஸில் அமைச்சர் ஆனந்த் கொடுத்த அதிரடி ஷாக் -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications