எனது கணவர் திருவண்ணாமலை என்பதால் எவ வேலு அங்கிளை தெரியும்.. “ரெய்டு ஓவர்”.. மீனா ஜெயக்குமார் பேட்டி!
கோவை: அமைச்சர் எ.வ.வேலுவிற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், தனது கணவர் திருவண்ணாமலைக்காரர் என்பதால் அங்கிளுடன் பழக்கம் என்றும் மீனா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த நவம்பர் 3ஆம் தேதி காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலையில் இருக்கும் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

கோவையில் திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலத் துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்திலும், அவர் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். கோவை ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள மீனா ஜெயக்குமாரின் வீடு, அதேபகுதியில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் வீடு மற்றும் சிங்காநல்லூர் பகுதியில் திமுக பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.எம்.சாமி ஆகியோரின் வீடுகளிலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மீனா ஜெயக்குமார் ஆலம் விழுதுகள்' என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இவரது கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஜெயக்குமார், திருவண்ணாமலைக்காரர் என்ற முறையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர். மீனா ஜெயக்குமார், திமுகவில் இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு மீனாவுக்கு திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர் பதவி கிடைத்தது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் என கூறப்பட்ட மீனா ஜெயக்குமாருக்கு, உட்கட்சி பூசலால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையிலேயே, மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை மீனா ஜெயக்குமார் சுமத்தியிருந்தார். இதனால், கட்சியில் இருந்து சில காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோவை திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் தொடர்பான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்த நிலையில் மீனா ஜெயக்குமார் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. கடந்த 6 நாட்களாக நடைபெற்ற வருமான வரித் துறை சோதனை இன்று மாலை நிறைவு பெற்றது. 6.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை முடிந்து கிளம்பினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மீனா ஜெயக்குமார், "இந்த சோதனையில் அதிகாரிகள் இங்கிருந்து எந்த பொருளும், பணமும், ஆவணங்களும் எடுத்து செல்லவில்லை, ஒரு ரூபாய் கூட எடுத்துச் செல்லவில்லை. எதற்காக எனது இல்லத்தில் சோதனை நடந்தது என்பதே புதிராக உள்ளது. எங்களிடம் அமைச்சர் தொடர்பான ஆவணங்களைக் கேட்டார்கள். அது எதுவும் எங்களிடம் இல்லை.
எங்களின் எல்லா வங்கி கணக்கு விவரங்களையும் எடுத்துக் கொடுத்தோம். அவற்றை ஆய்வு செய்தனர். எல்லா கணக்குகளையும் சரியாக நாங்கள் கொடுத்து, அதனை அவர்கள் சரிபார்க்கத்தான் தாமதம் ஆனது. எங்கள் வீட்டில் எங்களையோ, பணியாளர்களையோ ஐ.டி அதிகாரிகள் துன்புறுத்தவில்லை.
எனக்கும் அமைச்சர் எ.வ.வேலுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது கணவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவண்ணாமலை தான். எனது கணவரின் அப்பாவை அவருக்கு நன்றாகத் தெரியும். ஒருமுறை அவர் கோவை வந்தபோது பொங்கலூர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது முதல் அங்கிளுக்கு நன்றாகத் தெரியும். எப்போது சென்னை சென்றாலும் எனது கணவர் அமைச்சரை பார்ப்பார். அவர் இங்கே வந்தாலும் பார்ப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications