கோவை மாவட்டத்தில் மொத்தமாக பின்னடைவை சந்தித்த திமுக' - அதிர்ச்சி அளித்த ம.நீ.ம!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் உள்ள திமுக முன்னிலை வகிக்கவும் இல்லை. வெற்றி பெறுவது கடினம் என்ற சூழல் காணப்படுகிறது. குறிப்பாக கோவை மாநகர் பகுதியில் கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதை காலி செய்துள்ள மக்கள் நீதி மய்யம்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிக அளவு வாக்குகள் வாங்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைய காரணமாக இருந்த மநீம. இந்த முறை திமுக இங்கு தோல்வி அடைய காரணமாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை, பொள்ளாச்சி, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் உள்பட 8 தொகுதிகளிலும் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுமே முன்னிலை வகிக்கிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுவிட்டது. சில தொகுதிகளில் முன்னிலை காணப்படுகிறது.

திமுக தோற்க என்ன காரணம்

திமுக தோற்க என்ன காரணம்

இதன் மூலம் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பது நிரூபனம் ஆகி உள்ளது. எனினும் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றது திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ம.நீ.ம இந்த முறை கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. கோவை தெற்கில் கமல் போட்டியிட்டதால் அதன் தாக்கம் கோவை பகுதி முழுவதும் காணப்படுகிறது..

கமல் தோல்வி

கமல் தோல்வி

கோவை தெற்கு தொகுதியில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு கடும் போட்டி அளித்தார். 1500 வாக்கு வித்தியாத்தில் வானதி சீனிவாசனிடம் தோல்வியை தழுவி உள்ளார். இதற்கிடையே கோவை மாநகர் பகுதிகளான கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இப்போது அங்கும் அதிமுகவே முன்னிலை வகிக்கிறது. மநீம பிரித்த வாக்குகள் காரணமாக திமுகவிற்கு அங்கு ஒரு இடம் கூட கிடைப்பது கடினமாககி உள்ளது,.

சிங்காநல்லூர்

சிங்காநல்லூர்

கோவை வடக்கு தொகுதியில் தி.மு.க அ.தி.மு.க வேட்பாளர்கள் இடையே 974 வாக்குகள் தான் வித்தியாசம் காணப்படுகிறது. ஆனால், இங்கு ம.நீ.ம வேட்பாளர் தங்கவேலு 14,433 வாக்குகள் பெற்றிருக்கிறார் சிங்காநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க, தி.மு.க இடையே 12,000 வாக்குகள் வித்தியாசம் உள்ளது. ம.நீ.ம வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் 35,000 வாக்குகள் பெற்றுள்ளார். இதேபோல் கவுண்டம்பாளையம் தொகுதியிலும் அ.தி.மு.க, தி.மு.க இடையே 11,640 வாக்குகள் வித்தியாசம். இங்கு ம.நீ.ம வேட்பாளர் பங்கஜ் ஜெயின் 16,000 வாக்குகளை பெற்றிருக்கிறார். பொள்ளாச்சியில் அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் வால்பாறையில் அதிமுகவின் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார்.

திமுகவில் வலிமையா தலைவர்

திமுகவில் வலிமையா தலைவர்

கோவை மாவட்டத்தில் திமுகவின் பின்னடைவுக்கு மநீம முக்கியமாக காரணமாக அமைந்துள்ளது. அதேநேரம் அதிமுகவின் கோட்டையான கோவை மண்டலத்தில் திமுக இன்னமும் கூடுதலாக கவனம் செலுத்தியிருந்திருக்க வேண்டும் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஏனெனில் வேலுமணி மிகப்பெரிய பலத்துடன் உள்ளார். அவரை எதிர்த்து திமுகவில் வலிமையான தலைவர் தலையெடுக்கவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+