Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாட்ச் லிஸ்டில் இருந்தவரை ஏன் கண்காணிக்கவில்லை.. NIA கோட்டை விட்டது ஏன்? திமுக ராஜீவ் சுளீர் கேள்வி

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக பாஜகவினர் தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆளும் திமுக அரசின் தோல்வி என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், "NIA விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபரை NIA ஏன் தொடர்ந்து கண்காணிக்காமல் விட்டது?" என்று திமுகவின் ராஜீவ் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், "புலனாய்வு அமைப்புகளை செயல்படவிடுங்கள்! சங்கிகளை..." என்று ட்வீட் செய்துள்ளார்.

விசாரணை

விசாரணை

கோவையில் கடந்த 23ம் தேதியன்று அதிகாலையில் காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் அதை ஓட்டிவந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தமிழக காவல்துறையினர், உயிரிழந்த நபர் ஏற்கெனவே NIA எனப்படும் தேசிய தேசியப் புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டவர் என்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் திட்டமிட்ட சதி செயல் என பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையில் வழக்கு விசாரணை தற்போது தமிழ்நாடு காவல்துறையினரிடமிருந்து NIA வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விமர்சனம்

விமர்சனம்

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு "தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக, மையமாக மாறி விடாமல் கடும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்" என பாஜகவின் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர். மேலும் சில வலதுசாரிகள் தமிழ்நாடு பயங்கரவாதிகளின் கூடாரமாகவே மாறிவிட்டது என்றும் விமர்சித்திருந்தனர். இது குறித்து அறிக்கை விடுத்திருந்த தமிழக பாஜக, "தமிழக மக்களுக்கு திமுக அரசு குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட வழங்கவில்லை.

பதவி விலக வலியுறுத்தல்

பதவி விலக வலியுறுத்தல்

தமிழக காவல்துறையால் என்ன பயன்? உளவுத்துறை என்கிற பிரிவு தமிழகத்தில் பெயரளவில் மட்டுமே உள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் உளவுத்துறையின் தோல்வியின் வெளிப்பாடு" என்று கூறியிருந்தது. மேலும், "திறனற்ற திமுக அரசு மக்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறி விடாதீர்கள்" என்று பாஜக கூறியிருந்தது. இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பாஜகவின் கல்யாண ராமன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.

NIA கோட்டை விட்டது ஏன்

NIA கோட்டை விட்டது ஏன்

இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுகவின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி டிவிட்டரில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், "தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் யாரும் அதனை நியாயப்படுத்த முடியாது. கோவை சம்பவத்தில் அண்ணாமலை அரசியல் செய்வது கீழ்த்தரமானது. வெளிநாட்டு பயங்கரவாதம், தனிநபர் தீவிரவாதம் இவைகளை கண்டுபிடிக்க, புலனாய்வு செய்ய சகல அதிகாரங்களையும் UAPA Act 2008ன்படி ஒன்றிய அரசின் NIA-க்கு உள்ளது. கோவை சிலிண்டர் வெடிப்பில் தொடர்புடையவர் ஏற்கனவே NIA விசாரணைக்கு உள்ளான நபர் என்றால் அவரை ஏன் NIA கண்காணிக்காமல் கோட்டை விட்டது? என்று கேள்வி கேட்டு அரசியல் செய்தால் புலனாய்வு அமைப்பின் நம்பகத்தன்மையினை மக்கள் இழந்து விடுவார்கள். புலனாய்வு அமைப்புகளை செயல்பட விடுங்கள் சங்கிகளை..." என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+