கோவை இந்த முறை கூட்டணிக்கு கிடையாது! நேரடியாக களமிறங்கும் திமுக! வேட்பாளர் இவர்தான்? ஸ்டாலின் அதிரடி
கோவை; நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது கூட்டணி கட்சியான சிபிஎம் இருக்கும் கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக போட்டியிட உள்ளதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கே போட்டியிட உள்ள வேட்பாளர் யார் என்பது தொடர்பான தகவல்களும் வந்துள்ளன.
இது போக சிபிஎம் கட்சி மதுரை + திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் படி திமுக கேட்டுக்கொண்டுள்ளதாம். நாகப்பட்டினம் மற்றும் திருப்பூரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தக்க வைத்துக் கொள்ளும் என்றும் திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் வேலை: இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் திமுகவை ஜெயிக்க வைப்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறாராம்.
அதன்படி தன்னை சந்தித்த சிலர் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான தகவல் ஒன்றை அனுப்பி உள்ளாராம் செந்தில் பாலாஜி. அதில்.. கோவை மற்றும் கரூரில் நாம்தான் ஜெயிக்க வேண்டும். கோவை மற்றும் கரூரில் இந்த முறை திமுகவே நிற்கட்டும். இப்போது கூட்டணி கட்சியிடம் உள்ள இடம் திமுகவிற்கு வந்தால் நாம் ஜெயிக்கலாம்.
தேர்தல் பணிகளை எனக்கு நெருக்கமானவர்கள் பார்த்துக்கொள்வார்கள். திமுகவில் சரியாக இருக்கும் சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டு செந்தில் பாலாஜி தலைமைக்கு தகவல் அனுப்பி உள்ளாராம். கொங்கு அரசியலை கரைத்து குடித்தவர் என்பதால் செந்தில் பாலாஜியின் ஆலோசனைகளை திமுக பரிசீலனை செய்து வருகிறதாம்.
கோயம்புத்தூர் தொகுதியில் யார் போட்டியிடுவது?: கோயம்புத்தூரில் களமிறங்குவதில் திமுக தீவிரம் காட்டி வருகிறதாம். இதனால்தான் நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா இருக்கையை ஒதுக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசன் கோயம்புத்தூரில் போட்டியிட விரும்பியும் கூட அந்த தொகுதியை திமுக கொடுக்காததற்கு காரணம் இதுவே என்று கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து கோவைக்கு பதிலாக திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற சிபிஎம் கட்சிக்கு கடந்த வாரம் திமுக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கோயம்புத்தூரின் முக்கியத்துவத்தையும், தொழில்துறையின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு திமுகவே இங்கே களமிறங்கும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் திமுக சார்பாக டாக்டர் மகேந்திரன் இங்கே களமிறக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. ஆனால் வேட்பாளர் தேர்வு இன்னும் உறுதியாகவில்லை.
கூட்டணி அறிவிப்பு: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.
திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
கடந்த வாரம் காங்கிரஸ் உடன் திமுக உடன்படிக்கையை மேற்கொண்டது. அதற்கு முன் மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இப்போதுதான் கையெழுத்து ஆனது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications