"படில நிக்காதீங்க உள்ள வாங்க".. காக்கி சட்டையில் கலக்கும் சர்மிளா.. கோவையின் முதல் பேருந்து ஓட்டுநர்
கோவை: கோவையில் காந்திபுரம்- சோமனூர் வழித்தடத்தில் தனியார் பேருந்தை இயக்கி இளம்பெண் ஒருவர் அசத்தி வருகிறார். இவர்தான் கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுநராக அறியப்படுகிறார்.
ஆண்களுக்கு இணையாக பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகிறார்கள். ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை தற்போது மாறி பெரும்பாலான பணிகளில் பெண்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.
வீட்டுக்குள்ளேயே பெண்கள் முடங்கி கிடந்த காலம் போய் தங்கள் கல்வித் தகுதிக்கேற்ப ஒரு வேலையை தேடிக் கொள்கிறார்கள். படிப்பறிவே மிகவும் குறைவாக இருந்தாலும் தாங்களாகவே ஏதேனும் தொழிலில் முன்னேறி வருகிறார்கள்.

பெண்கள்
அந்த வகையில் ஆண்களுக்கு பெண்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கியர் பைக், கார் முதல் விமானம், போர் விமானம் வரை பெண்கள் இயக்கி வருகிறார்கள். பெண்களால் பெண்களுக்காக ஸ்பாக்கள், ப்யூட்டி பார்லர்கள், ஆடைகள் என நிறைய தொழில்களும் நடத்தப்படுகின்றன.

சாதனைக்கு பாலினம் இல்லை
சாதனை எப்போதும் வயதும் இல்லை, பாலினமும் தேவையில்லை. மனதில் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் துடிப்பும் இருந்தால் போதும் வானையே வில்லாக வளைக்கும் திறன் பெண்களுக்கு உண்டு. இப்படித்தான் கோவையில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பேருந்து ஓட்டி வருகிறார்.

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்
இதன் மூலம் கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் தனியார் பேருந்தை இயக்கி வரும் வடவள்ளியை சேர்ந்தவர் சர்மிளா (24). இவர்தான் தனியார் பேருந்தை அசால்ட்டாக ஓட்டி வருகிறார். இவர் கூறுகையில் எனது தந்தை மகேஷ்.

ஆர்வம் வந்தது எப்படி
இவர் ஆட்டோ டிரைவர். எனது தாய் ஹேமா. சிறு வயதில் இருந்தே எனக்கு என் தந்தைதான் ரோல் மாடல். அதனால் அவருடைய டிரைவர் பணி எனக்கு மிகவும் பிடிக்கும். இதனால் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. இதையடுத்து எனது தந்தையின் ஆட்டோவை ஓட்டினேன். இதற்கு எனது தந்தையும் உறுதுணையாக இருந்தார்.

கார் ஓட்ட கற்றேன்
பின்னர் படிப்படியாக கார் ஓட்ட கற்று கொண்டேன். இதையடுத்து சிலிண்டர் கொண்டு செல்லும் வாகனத்தில் டிரைவராக பணியாற்றினேன். அப்போதுதான் எனக்கு பெரிய கனரக வாகனங்களையும் ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் அந்த வாகனங்களையும் ஓட்டி லைசன்ஸ் (கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான HMV லைசன்ஸ்) எடுத்தேன். தொடர்ந்து வேலைக்காக காத்திருந்தேன்.

மகளிர் தினம்
நான் வேலைக்காக காத்திருக்கும் தகவல் மகளிர் தினத்தின் போது சமூகவலைதளங்களில் வைரலானது. இதை பார்த்துவிட்டு என்னை தனியார் பேருந்து நிறுவனம் தொடர்பு கொண்டது. இன்டர்வியூ அட்டென்ட் செய்தேன். இதையடுத்து சோமனூர்- காந்திரபுரம் வழித்தடத்தில் பேருந்தை இயக்கும் பணி எனக்கு கிடைத்துள்ளது.

ஊக்கம் உற்சாகம்
இந்த பணியை நான் சிறப்பாகவும் உற்சாகமாகவும் செய்து வருகிறேன். எனக்கு மற்ற பேருந்து டிரைவர்கள், நடத்துநர்கள், பயணிகள் எல்லாம் ஊக்கப்படுத்தியும் உற்சாகப்படுத்தியும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த சீட்டில் அமர்ந்து ஓட்டும் போதுதான் டிரைவர்களின் வலி என்ன என்பது தெரிகிறது. இது தெரியாமல் அவர்கள் பேருந்தை தாமதமாக கொண்டு சேர்த்தாலோ வேறு ஏதாவது காரணத்துக்காகவோ சிலர் ஏளனமாக பேசி வருகிறார்கள் என்றார் மனக்குமுறலுடன்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications