Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லுலு மால் சர்ப்ரைஸ்.. கோயம்புத்தூரில் குபீர்னு வந்த ஆஃபர்.. கோவையை திக்குமுக்காட வைத்த லுலு ஹைப்பர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோயம்புத்தூர் லுலு மால் குறித்து முக்கிய தகவல் ஒன்று, சோஷியல் மீடியாக்களில் வெளியாகி, கோவை மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. அது என்ன?

சென்னையை பொறுத்தவரை, நிறைய ஷாப்பிங் மால்கள் இருக்கின்றன.. முக்கியமாக, பீனிக்ஸ் மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ , ஆம்பா ஸ்கைவாக், போன்ற பிரம்மாண்டமான மால்கள் உள்ளதால், சென்னைவாசிகளுக்கு மிகுந்த உபயோகமாக இருந்து வருகிறது.

Lulu Coimbatore Lulu mall Kovai lulu mall First in Tamil Nadu lu lu hypermarket Special Offer Offer for Rice

அதேபோல, இவைகளையும்விட, மிகப்பிரம்மாண்டமான முறையில், புதிய மால் அமைப்பதற்கான வேலையை லுலு நிறுவனம் கையில் எடுத்து வருகிறது.. சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய இடத்தில் லுலு மால் வரப்போவதாக சொல்கிறார்கள்.

புதிய மால்கள்: இதைத்தவிர, அதேபோல, மால் ஆப் மெட்ராஸும், சென்னையில் எஸ்.ஆர்.பி. சிட்டியில் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. எனவே, விரைவில், லுலு மால், மால் ஆப் மெட்ராஸ் என 2 விதமான மால்கள் வரப்போகின்றன.

இதைத்தவிர, மத்திய அரசின் சார்பில், ஒரு மாவட்டம் ஒரு பொருட்கள் என்ற திட்டத்தின் கீழ், எழும்பூரில் "யூனிட்டி" என்ற புதிய மால் கட்டப்பட உள்ளதாக சொல்கிறார்கள்.. அந்தவகையில், எக்மோரில் கோ ஆப்டெக்ஸ் வளாகத்திலேயே, 9 மாடிகளுடன் அமைய உள்ளதாம். எனவே சென்னைவாசிகள் அதிக ஆர்வத்தில் உள்ளனர்.

ஹைப்பர் மால்: சென்னையை போலவே கோயம்புத்தூர் லுலு மாலும், மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது.. மிகப்பெரிய தொழில் நகரமான கோவையில், ஹைப்பர் மார்க்கெட்டை அமைத்திருக்கிறது லுலு நிறுவனம். அவிநாசி சாலையில், லட்சுமி மில்ஸ் வளாகத்தில், லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.

இந்த மால் திறக்கப்பட்ட நாளிலிருந்தே இன்றுவரை, விற்பனையில் படுபிஸியாக செயல்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் பிரதான காரணம், லுலு மால்களில் அவ்வப்போது அறிவிக்கப்படும் ஸ்பெஷல் ஆஃபர்கள்தான்.

சலுகைகள்: இந்த சலுகைகள், கோவை மக்களை வெகுவாக ஈர்த்து வருவதால், எந்நேரமும் விற்பனை அதிகமாகவே காணப்படுகிறது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், என பண்டிகை கால தள்ளுபடிகள் வழங்கப்பட்டன.. தள்ளுபடி விலையில் பொருட்கள் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டன..

பெண்களை கவரக்கூடிய ஆஃபர்கள், குழந்தைகளை கவரக்கூடிய ஆஃபர்கள், தம்பதிகளை ஈர்க்கக்கூடிய ஆஃபர்கள்தான், கோவை லுலு மால் வளர்ச்சிக்கு பிரதான காரணமாக உள்ளது. அரிசி வகைகளுக்கும் "ரைஸ் காலா" என்ற பெயரில் இந்த ஆஃபர் வெளியிட்டு, இல்லத்தரசிகளின் ஆதரவையும் லுலு பெற்றுவிட்டது.

விசேஷம்: இப்போது விசேஷம் என்னவென்றால், இந்த லுலு மால் திறக்கப்பட்டு முதலாம் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.. இதனை முன்னிட்டு எங்குமே இல்லாத அளவில் ஆஃபர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.. இதனால், லுலு மாலில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.. அதிலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சர்ப்ரைஸ் என்ற பெயரில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, வெகுவாக அனைவரையும் கவர்ந்திழுத்து வருகிறதாம்.

இத்தனை நாட்களும் கோடை விடுமுறை ஆஃபர்கள் நடந்து முடிந்த நிலையில், பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ளதால், பொதுமக்கள் இந்த மாலில் பொருட்களை வாங்க அதிகமாக திரண்டு வருகிறார்களாம்!

இன்னொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.. தஞ்சாவூரில் அரிசி அரைக்கும் ஆலையும் விரைவில் அமைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கோவையிலேயே இன்னொரு ஒரு லுலு நிறுவனத்தின் கிளை திறக்கப்படும் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது..

ரைஸ் மில்: அந்தவகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உணவு பதப்படுத்தும் தளங்களை கொண்டு வர லுலு நிறுவனம் திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.. அப்படி மேட்டுப்பாளையத்தில் இந்த லுலு அமையும் பட்சத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அமையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.. எனினும், அரிசி உள்ளிட்ட மற்ற வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக அதிருப்தி வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+