20 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் கொண்ட டிடிஎஃப் சேனல்.. வாசனுக்கு கிடைக்கும் வருமானம் என்ன தெரியுமா?
கோவை: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு (22) மாதந்தோறும் யூடியூப் மூலம் கிடைக்கும் வருமானம் என்ன தெரியுமா?
Recommended Video
இதுகுறித்து டிராவல் விபிலாகரான டிடிஎஃப் வாசன் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில் நான் பைக் ஓட்டுவதை பார்த்த எனது சொந்தகாரர்கள், என் அம்மாவிடம் "உன் பையன் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பைக் ஓட்ட போகிறான், வேலைக்கு அனுப்பு என்பார்கள். அம்மாவே என்னை நம்பினாலும் இவர்கள் இவ்வாறு சொல்லும் போது அம்மா வருத்தப்படுவார்.
அவரை பார்த்து நானும் வருத்தப்படுவேன். அடுத்ததாக லண்டனுக்கு போக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கர்நாடகாவிலிருந்து ஒருவர் லண்டனுக்கு பைக்கில் சென்றுள்ளார், ஆனால் தமிழகத்திலிருந்து இதுவரை யாருமே சென்றதில்லை. நேபாளம் போய்விட்டு திரும்பிய போது மகாராஷ்டிராவில் என் வண்டி பிரேக் டவுன்னாகிவிட்டது.

ஊர் ஊராக செல்லும்
ஊர் ஊராக போகும் போது சாப்பாடு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. வானிலை மாற்றங்கள் எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. லடாக், நேபாளம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற போது வண்டிக்கான பொருட்கள் எதையுமே கொண்டு செல்ல மாட்டேன், ஆனால் யூடியூப்புக்கான வீடியோ எடுக்கவே நிறைய பொருட்களை கொண்டு செல்வோம்.

லடாக்கிற்கு பைக்
எனது இரு நண்பர்களும் லடாக்கிற்கு பைக்கில் போக காசு இல்லாமல் லிப்ட் கேட்டே போய் வந்தனர். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் ஓராண்டாக நண்பர்களாக உள்ளோம். நாங்கள் மூவரும் செல்லும் போது ஹெல்மெட்டில் இன்டர்காம் போன் கனெக்ட் செய்து பேசிக் கொள்வோம். எந்த சிக்னல் பிரச்சினையும் இருக்காது.

சூப்பர் பைக்
சூப்பர் பைக்குகளுக்கு இரு டயர்கள் ரூ 50 ஆயிரம் ஆகும். பராமரிப்பு அதிகம். இந்த பைக்குகளின் சவுண்டே வேற மாதிரி இருக்கும். எனது மாத வருமானத்தை நான் பகிர முடியாது. அது எப்போது வேண்டுமானாலும் ஏறும் இறங்கும். நாம் நிறைய வீடியோ போட்டால் நிறைய வருமானம், குறைந்த வீடியோ போட்டால் குறைந்த வருமானம். எனவே எனக்கு இந்த யூடியூப் மூலம் வருமானம் என பார்த்தால் 2 முதல் 2.5 லட்சம் ரூபாய் வரும்.

செலவு
செலவு என பார்த்தால் அதிகம்தான். பெட்ரோல் செலவு, உணவு செலவு, வண்டி செலவு இதெல்லாம் இருக்கிறது. என் வீட்டுக்கு என 20 ஆயிரம் தருவேன், ஓராண்டுக்குள் டிடிஎஃப்பை ஒரு பிராண்டாக மாற்றிவிட்டு நான் எங்கள் நிலத்தை பார்த்துக் கொள்வேன். எனக்கு விவசாயம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும் என வாசன் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications