இரவில் உல்லாசம்.. கோவைக்கு வந்த பிரபலம்.. சிக்கிய சிக்கந்தர் யார் தெரியுமா? கலங்குது கோயம்புத்தூர்
கோவை: கோவையில் விபச்சார கும்பல் செய்த அட்டூழியம் பலரையும் அதிர செய்து வருகிறது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் துவங்கியிருக்கும் நிலையில், பாலியல் கும்பல் தலைவனின் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கோவையை பொறுத்தவரை, சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள மிகப்பெரிய தொழில் நகரம்.. கல்வியிலும், மருத்துவத்திலும், வணிகத்திலும் தாறுமாறாக முன்னேறி கொண்டிருக்கிறது.

வெளிநாடு: எனவேதான், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல், நைஜீரியா, கென்யா, பூடான் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கோவைக்கு ஏராளமான மாணவர்கள், கல்வி கற்க வருகிறார்கள்.. மாணவர்கள் மட்டுமல்லாமல், தொழில் முறை பயணமாகவும் ஏராளமான வெளிநாட்டினரும், வெளி மாநிலத்தினரும் கோவைக்கு வருகிறார்கள். இவர்களைதான் குறி வைத்துள்ளது இந்த பாலியல் கும்பல்.
இன்டர்நேஷனல் அளவில் வாட்ஸ்அப் ஒன்றை ஏற்படுத்தி, கோவைக்கு வரும் நபர்களை விபச்சாரத்துக்கு பயன்படுத்தி கொள்ளை லாபம் பார்த்துள்ளது.. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு இதுகுறித்த ரகசிய தகவல்கள் வந்தவண்ணம் இருந்த நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்..

அதிரடி கைது: இப்படிப்பட்ட சூழலில்தான், சில நாட்களுக்கு முன்பு காந்திபுரம் பகுதியில் 2 பாலியல் தொழில் பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்தான், சிக்கந்தர் பாதுஷா என்ற 41 வயது நபரின் பெயர் அடிபட்டது..
சிக்கந்தர் பாதுஷா மீது ஏற்கனவே இளம்பெண்கள் மற்றும் வெளிநாட்டு பெண்களை பாலியல் தொழிலில் தள்ளியதாக சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. எனினும் சிக்கந்தரை போலீசாரால் பிடிக்க முடியவில்லை.. பெரும்பாலும், கொல்கத்தாவிலேயே பதுங்கி இருந்து பாலியல் பிசினஸ் செய்து வந்ததால், உடனடியாக கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இறுதியில் நேற்றுமுன்தினம்தான் சிக்கந்தரை கைது செய்துள்ளனர்.
மேனேஜர்: தேனி மாவட்டம் இபி ஆபிஸ் ரோட்டை சேர்ந்தவன் இந்த சிக்கந்தர்.. இவரது அசிஸ்டென்ட் 32 வயது ஸ்டீபன்சன்.. காந்திஜி ரோட்டை சேர்ந்தவர்.. இந்த பாதுஷாதான், பாலியல் கும்பலின் தலைவன், விபச்சார புரோக்கர்... நாடு முழுவதும் நெட்வொர்க் வைத்து, 117 ஏஜென்டுகள் மூலம் வெளிநாட்டு அழகிகளை, பாலியல் தொழிலுக்கு சப்ளை செய்து வந்தார்.
தாய்லாந்து, ரஷ்யா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்களை, விமானத்தில் அழைத்து வந்து ஸ்டார் ஓட்டலில் தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார் பாதுஷா..
கோவை ஹோட்டல்: இந்த பெண்களின் போட்டோவை முதலில் வாட்ஸ் அப்பில் அனுப்பி, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விலை நிர்ணயிப்பாராம்.. கோவையில் குறிப்பிட்ட 8 நட்சத்திர ஹோட்டல்களில் அந்த பெண்களை தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளார்..
ஒரு மணி நேரம், ஒரு நாள் முழுவதும், இரவு மட்டும்.. என தனித்தனியாக நேரத்தை பிரித்து, அதற்குரிய பணத்தை வசூல் செய்து வந்துள்ளனர்... ஒரு இரவுக்கு குறைந்தது ரூ.30 ஆயிரம் வரை பெற்றிருக்கிறார்.
பண பரிவர்த்தனை: அந்தவகையில், மாதத்துக்கு ரூ.50 லட்சம் பணத்தை அள்ளியிருக்கிறார் பாதுஷா. எதையுமே நேரில் செய்யாமல், பண பரிவர்த்தனை முதல் மொத்த பிசினஸ் டீலிங்கையும் வாட்ஸ் அப் மூலமாகவே செய்து வந்துள்ளார்.. கையில் ஏகப்பட்ட பணம் புழங்கவும், பெங்களூரில் சொந்தமாக பிரியாணி கடையை நடத்தி வந்துள்ளார்.
பாலியல் தொழிலில் நிறைய, போட்டிகள், மிரட்டல்கள் வரும் என்பதால், அதையெல்லாம் சமாளிக்க, ரவுடி கும்பலுடன் நட்பை வைத்திருந்தாராம் பாதுஷா.. இதற்காக அந்த ரவுடி கும்பலுக்கு நிதியும் தந்து வந்துள்ளார்.. இதில், சில ரவுடிகளின் வங்கிக்கணக்கிற்கு அவர் பணப்பரிமாற்றம் செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஈரோடு பாதுஷா: கடந்த 2008 முதல் 2013 வரை திண்டுக்கல்லில் சொந்தமாக செல்போன் கடை நடத்தி வந்த பாதுஷாவுக்கு, ரூ.55 லட்சம் வரை கடன் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார்.. அப்போதுதான், மோசடி வழக்குகளில் தொடர்புடைய ஷேக் அப்துல் காதர் என்பவரின் மூலமாக ஈரோட்டில் பாலியல் தொழில் செய்து வந்த கண்ணன் என்பவரின் அறிமுகம் பாதுஷாவுக்கு கிடைத்துள்ளது. இதற்கு பிறகுதான் 2015ம் ஆண்டு முதல் பாலியல் தொழிலில் பாதுஷா இறங்கியிருக்கிறார்.
ஆரம்பத்தில், இந்த பாலியல் தொழில் கும்பல் தலைவனாக கபீர் சிங் என்பவர் இருந்துள்ளார்.. டெல்லியை சேர்ந்த இந்த கபீர்சிங் தலைமையில்தான் வாட்ஸ் அப் குழு செயல்பட்டு வந்துள்ளது. வெளிநாட்டு பெண்களை பாலியல் தொழிலுக்கு விமானம் மூலம் வரவழைத்து, அனுப்பி வைப்பது எல்லாமே இந்த கபீர்சிங் தான். இந்த கபீர்சிங்கைதான் இப்போது போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டார் ஓட்டல்கள்: கோவையில் 8 நட்சத்திர ஓட்டல்களில் அழகிகள் நீண்ட நாட்கள் தங்கியிருக்கிறார்கள்? அந்த ஸ்டார் ஓட்டல்கள் என்னென்ன என்ற விவரம் தெரியவில்லை.. இந்த ஓட்டலுக்கு சில முக்கிய பிரமுகர்களும் வந்து போனதாக சொல்கிறார்கள்.. இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது.. இது தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஸ்டார் ஓட்டல்கள் மீதும் உரிய நடவடிக்கை பாயும் என்கிறார்கள்.
போலீசாரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே, தன்னுடைய இருப்பிடத்தை மாற்றி கொண்டே இருப்பாராம் பாதுஷா.. ஆனால், நம்முடைய போலீசார், கடந்த 4 மாதமாகவே விடாமல் கண்காணித்து, ஸ்கெட்ச் போட்டு பாதுஷாவை இப்போது தூக்கியிருக்கிறார்கள்.. அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. அத்துடன், கபீர்சிங்கும் சிக்கிவிட்டால், இந்த கும்பலின் மொத்த வண்டவாளமும் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கந்தர் பாதுஷாவை, விபச்சார புரோக்கர்களும், கஸ்டமர்களும், ஏஜென்டுகளும், "சி.கே" என்றுதான் செல்லமாக அழைப்பார்களாம்.. 4 மாத காலமாக இவரை தேடி வந்தநிலையில், சொகுசு பங்களாக்களையும் நோட்டமிட்டு வந்துள்ளனர்.
எப்போதும் கார்கள் வந்து செல்லும் குறிப்பிட்ட சொகுசு வீட்டிற்குள்ளே சென்று பாரத்தபோதுதான், 15க்கும் மேற்பட்ட வெளி நாட்டு இளம் பெண்களுடன் அரைகுறை டிரஸ்ஸில் இருப்பதை தனிப்படை போலீசார் கண்டனர்.. அவர்களிடம் விசாரித்து கொண்டிருக்கும்போதே, திடீரென ஒருவர் காரில் ஏறி தப்பி செல்ல முயன்றார்.. அவரை போலீஸ்காரர்கள் சுற்றி வளைத்து பிடித்தபோதுதான், அது "சி.கே" என்று தெரிந்ததாம்.
தாய்லாந்து, ரஷ்யா இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, விபச்சாரத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வாட்ஸ்சாப் குழு மூலம் விபச்சார தொழில் செய்த நபர்களிடமிருந்து சிம்கார்டுகள், செல்போன்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.. இதில், கைப்பற்றப்பட்ட செல்போன்களில் உள்ள நம்பர்களை வைத்து, விசாரணை துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications