Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆபாச ஆட்டம்".. நல்லா பாருங்க, கர்ப்பமா இருக்கேன்.. பதறியடித்து வந்த தமன்னா.. விருதுநகரில் வினோதினி?

கையில் வீச்சரிவாள், வாயில் சிகரெட்டுடன் வீடியோ போட்ட தமன்னாவை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை: இளம்பெண் தமன்னா இன்னும் சிக்கவில்லை.. அதனால், அவரை தனிப்படை போலீசார் விருதுநகர் விரைந்துள்ள நிலையில், தமன்னாவின் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது?

கோவை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் தமன்னா... வினோதினி என்று மற்றொரு பெயரும் உண்டு.. இவர் இன்ஸ்டாகிராமில் ''fans call me Thamanna'' என்ற பெயரில் அக்கவுண்ட் வைத்துள்ளார்...

நிறைய டான்ஸ்களை ஆடி வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்தார்.. அவர் ஆடும் டான்ஸ் பெரும்பாலும், ரவுடிசம் பாடல்களுக்குத்தான்..

 ஜாலி வீடியோ

ஜாலி வீடியோ

இவர் தன்னுடைய கையில், வீச்சரிவாள், கத்தி, இப்படியான ஆயுதங்களை ஏந்திக் கொண்டே டான்ஸ் ஆடுவார்.. சில சமயம், கையில் சிகரெட்டும் இருக்குமாம்.. விளையாட்டுக்காகவும், ஜாலிக்காகவும், நிறைய லைக்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படியெல்லாம் வீடியோக்களை பதிவிடவும், அதுவே அவருக்கு இப்போது வினையாகிவிட்டது. கோவை மாநகரில் கடந்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய 2 நாட்களில் இருவேறு கொலை சம்பவங்கள் நடந்தன.. இந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை, கோவை மாநகர போலீசும் கைது செய்துள்ளது.. மேலும் இச்சம்பவங்கள் குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு, அதன்மூலமாகவும் குற்றவாளிகளை கைது செய்துள்ளது..

 வாயில் சிகரெட்

வாயில் சிகரெட்

இவர்களிடம் விசாரணையும் ஆரம்பமானது.. "பிரகா சகோதரர்கள்" என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர்கள் குழு ஒன்று நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.. துப்பாக்கிகள் மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களையும் அதில் (ரீல்ஸ்) வெளியிட்டு வந்தனர்... இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தைத்தான், கைதான கோவையை சேர்ந்த பிரபல ரவுடிகள் தீவிரமாக பின்பற்றி வந்திருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இந்த பிரகா சகோதரர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் தீவிர உறுப்பினராக இருப்பவர் தமன்னா.. இதை பார்த்துதான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் புகைப்பிடிப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வந்திருக்கிறார்.

 நர்ஸிங் பெண்

நர்ஸிங் பெண்

அதனால்தான், தமன்னாவையும் கைது செய்ய கோவை மாநகர போலீஸார் தனிப்படை அமைத்தனர். இதற்கு இன்னொரு காரணமும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.. இளம்பெண் வினோதினி என்ற தமன்னா ஒரு மோசடிப்பேர்வழியாம்.. இவருக்கு 23 வயதாகிறது.. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தமன்னா, நர்சிங் படித்துள்ளார்.. பல ஆண்டுகளாக கோவையில் உள்ள பீளமேடு, காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்ததுடன், மோசடி வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.. இந்த மோசடிக்காக, ஒருமுறை கைதாகியும் உள்ளார். கடந்த 2021ல் பீளமேடு போலீசார் தமன்னா மற்றும் சூர்யா என்கிற சூர்யபிரசாத் ஆகியோரை 2 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்துள்ளனர்.

 கர்ப்பமா இருக்கேன்

கர்ப்பமா இருக்கேன்

எனினும் தமன்னா திருந்தவில்லை.. பணக்கார குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களுடன் நட்பாக பழகி, நண்பர்களின் உதவியுடன் பணம் பறித்து வந்துள்ளார்.. வசதி படைத்த இளைஞர்களிடம் நெருங்கி பேசி, அவர்களை தன்னுடைய இடத்திற்கு நைசாக வரவழைத்து விடுவாராம்.. தன்னுடைய ஆண் நண்பர்களை அங்கே வரவழைக்க செய்து, இளைஞர்களை மிரட்டி பணமும் பறித்து வந்துள்ளார். சமீபகாலமாகவே, ஆயுதங்களை கையிலேந்தி வீடியோக்களை வெளியிட்டு, 2 குழுக்களுக்கு இடையே பகையை உருவாக்கவும் முயற்சி செய்திருக்கிறார். அதனால்தான், தமன்னாவை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.

 விக்கித்த வினோதினி

விக்கித்த வினோதினி

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்திலான இந்த வீடியோ குறித்து விசாரித்த போலீசார், வினோதினியை வளைக்க தனிப்படையும் அமைத்தனர். திருப்பூரில் அவர் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைக்கவும், தனிப்படையினர் திருப்பூருக்கு விரைந்தனர். ஆனால், அங்கு அவர் இல்லை.. இப்போது, விருதுநகரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்கும், அங்கு விரைந்திருக்கிறார்கள். போலீசார் தன்னை தீவிரமாக தேடுவதை அறிந்தது, வினோதினியும் அவரைச் சேர்ந்தவர்களும் கலக்கம் அடைந்தனர்... எந்நேரமும் வினோதினி என்கிற தமன்னா கைதாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், நேற்று முன்தினம் திடீரென வீடியோ ஒன்றை வெளியிட்டார் வினோதினி..

 தமன்னா எங்கே

தமன்னா எங்கே

அந்த வீடியோவில் பேசிய வினோதினி, "நான் 2 ஆண்டிற்கு முன்பு தான் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை வெளியிட்டு வந்தேன். அப்போது டிரண்டிங் ஆகும் ஆசையில் அந்த வீடியோக்களை பதிவிட்டேன். அதன்பிறகு கஞ்சா வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு போனேன்.. சிறையில் இருந்து திரும்பியதுமே, ஆட்சேபகரமான வீடியோக்கள் எதையும் நான் வெளியிடவில்லை. ஆனாலும் போலீசார் என்னை தேடுகிறார்கள். என் நண்பர்கள் சிலரை போலீஸ் ஸ்டேஷனில் பிடித்து வைத்துக்கொண்டு விட மறுக்கிறார்கள். நான் வந்தால் மட்டுமே அவர்களை விடுவிப்போம் என்று போலீஸ் சொல்கிறார்களாம்..

ஹேர்ஸ்டைல்

ஹேர்ஸ்டைல்

நான் முன்பு போல கிடையாது.. இப்போது நான் திருந்திவிட்டேன்.. நிறைய மாறிவிட்டேன்.. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது.. கணவருடன் வாழ்ந்து வருகிறேன்.. இப்போது நான் 6 மாத கர்ப்பமாகவும் இருக்கிறேன்.. வீடியோ எதையும் நான் இப்போது போடவுமில்லை.. நல்லா பாருங்க.. பழைய வீடியோவில் நான் முடி வெட்டியிருப்பேன்.. அதனுடன் இப்போது ஒப்பிட்டு பார்த்தாலே புரியும்.. திருந்தி வாழும் என்னை போலீசார் தேட வேண்டாம்" என்று பேசி தன்னிலை விளக்கம் ஒன்றை வினோதினி வெளியிட்டுள்ளார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+