“ஜென்-Z இளைஞர்களை சாதாரணமாக நினைக்காதீங்க”.. கோவையில் அண்ணாமலை பேச்சு

Subscribe to Oneindia Tamil

கோவை: இன்றைய இளைஞர்களை நாம் சாதாரணமாக 'ஜென்-z இளைஞர்கள்' என்று சுருக்கி மதிப்பிடுகிறோம், இன்றைய தலைமுறை இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற 'ஆபரேஷன் சிந்தூர்' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜென்-Z இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் 'ஆபரேஷன் சிந்தூர்' புத்தகத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்தியாவின் ராணுவ பலம் மற்றும் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

don-t-underestimate-gen-z-youth-annamalai-speaks-in-coimbatore

கோவையில் நடைபெற்ற விழாவில், 'ஆபரேஷன் சிந்தூர்' புத்தக வெளியீட்டு விழா மற்றும் இந்திய ராணுவம் குறித்த இணைய தொடர் தொடக்க விழா நடைபெற்றது. 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: ஜென்-Z இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் 'ஆபரேஷன் சிந்தூர்' புத்தகத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்றார். நாட்டிற்காக தன் உயிரையும் துச்சமாக நினைத்து, விபத்து ஒன்றில் உடல் உறுப்புகளை இழந்த கமாண்டோ பிரபாகரன் குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

தொடர்ந்து, தான் ஓய்வு பெற்றிருந்தாலும், மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் போர் முழக்கத்தைக் கேட்டாலே தனக்கு அத்தகைய உத்வேகம் கிடைக்கும். மேஜர் முகுந்த் மறைந்தாலும் 'அமரன்' படம் மூலம் அவர் இன்று அனைத்து இடங்களிலும் சென்று சேர்ந்துள்ளார். மகன் இழந்த துயரத்திலும் வரதராஜன் ஐயா போன்றவர்கள் காட்டும் மனவலிமை வாழ்க்கைக்கான ஒரு இலக்கணம்.

ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றபோது பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியான தகவல்களைவிட, மேஜர் மதன் குமார் தனது யூடியூப் சேனல் வாயிலாகத் தெரிவித்த விளக்கங்கள்தான் பொதுமக்களுக்கு மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் இருந்தது. முன்பு இந்தியா பொருளாதார வலிமை இல்லாமல் இருந்த நிலை மாறி, இன்று 'ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகளை உறுதியுடன் செய்து முடிக்கும் அளவிற்கு நாடு வளர்ந்துள்ளது.

பாகிஸ்தானை விட நமது பொருளாதார வளர்ச்சி பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவுக்கு அருகில் பாகிஸ்தான் இருப்பது என்பது 25 பைசா நாணயத்திற்கு அருகில் 500 ரூபாய் நோட்டை வைப்பதற்கு ஒப்பானது. நமது ராணுவம் எதிரிகளுக்கு 14,500 கோடி ரூபாய் அளவிற்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு நாட்டின் பாதுகாப்பு மிகச் சிறப்பாக உள்ளது. நமது ராணுவ தளவாட உற்பத்தி உலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கு வருகிறது. காஷ்மீரில் பொதுமக்களைக் கொன்றுவிட்டு அதை 'ஜிகாத்' என்று கூறுபவர்களை அல்லாவே மன்னிக்க மாட்டார் என்று மசூதியிலேயே எழுதப்பட்டுள்ளது.

இன்றைய இளைஞர்களை நாம் சாதாரணமாக 'ஜென்-z இளைஞர்கள்' என்று சுருக்கி மதிப்பிடுகிறோம். இன்றைய தலைமுறை இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். என்னிடம் பேசிய சில இளைஞர்கள் கூட, "அண்ணா நாங்கள் ஜென்-z இளைஞர்கள், எங்களிடம் அதற்கேற்ப பேசுங்கள்" என்று துடிப்பாகக் கூறுகின்றனர்.

அகந்தையைத் தாண்டி தேசப்பற்று போன்ற சில முக்கியமான விஷயங்களுக்காக இன்றைய தலைமுறை இளைஞர்கள் உறுதியாக நிற்கிறார்கள். நாட்டிற்காக உயிரை விடுவதை விட பெரிய பெருமை வேறு எதுவும் இல்லை என்பதை மேஜர் முகுந்த் தன் வாழ்வின் மூலம் செய்து காட்டியுள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+