6 மாத கைக்குழந்தையை அமைச்சர் காலில் போட்ட டிரைவர்.. பதறிப்போன அதிகாரிகள்.. என்னாச்சு?
கோவை: கோவையில் அரசு நிகழ்ச்சியின்போது திடீரென ஓட்டுநர் ஒருவர் தனது ஆறு மாத கைக்குழந்தையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காலில் போட்டு கோரிக்கை வைத்துள்ளார். இந்நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி மற்றும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்புகளில் பணிமனை அளவில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

அப்போது திடீரென மேடைக்கு ஆறு மாத குழந்தையுடன் வந்த அரசுப் பேருந்து ஓட்டுனர் கண்ணன் என்பவர், கைக்குழந்தையுடன் அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்து பணியிட மாறுதல் தொடர்பாக கோரிக்கை விடுத்தார். திடீரென ஒருவர் வந்து குழந்தையை காலில் போட்டு காலில் விழுந்ததால் அமைச்சர் சிவசங்கர் பதறிப் போய் அவரைத் தூக்கிவிட்டு என்ன ஏதென விசாரித்தார்.
ஓட்டுநர் கண்ணன் தனது மனைவி முனிதா டெங்கு காய்ச்சல் வந்து உயிரிழந்து விட்டதால், குழந்தைகளை பார்த்துக்கொள்ள சிரமப்படுவதால் தேனிக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும், பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை அமைச்சர் சிவசங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓட்டுநர் கண்ணன் கூறுகையில், "எனது சொந்த ஊர் தேனி. எனக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் மனைவி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார். எனவே எனது இரண்டு பெண் குழந்தைகளையும் எனது தாய் தந்தையையும் நான் தான் பார்த்து கொள்கிறேன்.
எனது பெற்றோர்களுக்கும் வயது முதிர்வு காரணமாக குழந்தைகளை பார்த்து கொள்வதில் சிரமமாக இருப்பதால் சொந்த ஊரிலிருந்து கோவைக்கு அழைத்து வர இயலாத சூழல் உள்ளது. எனவே என் சொந்த ஊருக்கே பணி மாறுதல் வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இது குறித்து ஏற்கனவே பலமுறை பொது மேலாளரிடம் பணி மாறுதல் தொடர்பாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே அமைச்சரை நேரில் பார்த்து குழந்தையுடன் கோரிக்கை வைத்தேன். அமைச்சர், எனது பிரச்சனை குறித்து விசாரித்து தீர்வு காணப்படும் என தெரிவித்தார்" எனக் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications