Bumble App மூலம் பழகி இளம்பெண்ணிடம் நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகன் கைது.. கோவை போலீஸ் அதிரடி
கோவை: கோவையில் டேட்டிங் ஆப் ஆன பம்பிள் ஆப் மூலம் பழகிய இளம்பெண்ணிடம் இருவர் நகை மற்றும் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் டிஎஸ்பி மகன் தருண் என்பவரை கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர்.
கோவை ஏர்போர்ட் அருகே கடந்த நவம்பர் 2 ஆம் தேதி 3 பேர் கொண்ட போதை கும்பலால் காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. அதே நாளில் கோவையில் மற்றொரு அதிர்ச்சி தரும் சம்பவமும் நடைபெற்றது.

கோவையில் உள்ள ஒரு ஹாஸ்டலில் 25 வயது பெண் ஒருவர் தங்கி பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு பம்பிள் ஆப் எனும் டேட்டிங் ஆப் மூலமாக ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தருண் என்ற 28 வயதான இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பழகி வந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி தருண் அந்த இளம்பெண்ணை தன்னுடைய எஸ்யூவி காரில் கோவை, காகாசாவடி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் செல்லும் வழியிலேயே அந்த காரில் தருணின் நண்பரான 28 வயதான தனுஷ் என்ற இளைஞரும் காரில் ஏறியுள்ளார்.
அப்போது, திடீரென போட்டோ எடுத்துவிட்டு அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளனர். இளம்பெண் அணிந்திருந்த செயின், மோதிரம் உள்ளிட்ட 3 பவுன் நகைகளைப் பறித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் யுபிஐ பரிவர்த்தனை மூலமாக ரூ. 90 ஆயிரத்தையும் பறித்துள்ளனர். இதனால், அந்தப் பெண் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், இரவு 11 மணியளவில் சிங்காநல்லூர் அருகே அந்தப் பெண்ணை இறக்கிவிட்டுள்ளனர். இரவு நீண்ட நேரமாகிவிட்டது இனி ஹாஸ்டலுக்குச் செல்ல முடியாது என்று அந்தப் பெண் கூறியுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணின் செல்போனை வாங்கி ரூம் புக் செய்து அனுப்பி சென்றுள்ளனர்.
ஹோட்டல் ரூமிற்குச் சென்ற அந்தப் பெண் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் காவல் துறையினர் தனுஷ் மற்றும் தருண் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர்.
விசாரணையில், பெண்ணை மிரட்டி பணம் பறித்துச் சென்ற தருண், காவல் துறையில் பணியாற்றி வரும் டி.எஸ்.பி தங்கபாண்டியன் என்பவரது மகன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, டி.எஸ்.பி.யின் மகன் தருணை, கோவை பந்தயசாலை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். டிஎஸ்பி தங்கபாண்டியன் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications