ஆர்வமாக முந்தியடித்து தவெக கட்சியில் சேருகிறார்களா? அப்பப்போ முடங்கும் சர்வர்

Subscribe to Oneindia Tamil

கோவை: விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியையும் விஜய் தீவிரப்படுத்தியுள்ளார். இதற்காக தனி செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கட்சியில் இணைந்து வருவதால் தவெக சர்வர் கடந்த சில நாட்களாக அடிக்கடி முடங்கி வருவதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேஷம் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக சித்தாந்த எதிரி என்றும் திமுக அரசியல் எதிரி என்றும் குறிப்பிட்டார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குண்டையும் வீசியிருந்தார்.

tvk vijay

பாசிம் குறித்து விஜய் பேசிய கருத்தும் சர்ச்சையானது. திமுக, பாஜக கட்சிகள் விஜய்க்கு எதிரான கருத்துகளை முன் வைத்து வருகின்றனர். விசிக தலைவர் தொல். திருமாவளவனும் விஜய்க்கு எதிராக கூறியிருந்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுகவும் விஜய் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

நடிகர் விஜயின் தவெக நடத்திய விக்கிரவாண்டி மாநாடு அரசியல் ரீதியாக பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. மாநாடு நடந்து முடிந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் தவெக மற்றும் விஜய் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் நடைபெற உள்ள அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் திருமாவளவன் மற்றும் விஜய் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதேசமயம் கட்சியை வலுப்படுத்துவதற்காக டிசம்பர் மாதம் முதலே விஜய் மண்டல வாரியாக விசிட் அடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க உறுப்பினர் சேர்க்கை பணியை ஜெட் வேகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடங்கியுள்ளனராம். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் சேர்க்கைக்கு என தனி செயலியை நடிகர் விஜய் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தார்.

உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டதில் இருந்தே லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் அதில் இணைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து, அவரது ரசிகர்கள் தொண்டர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த தவெக மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர்கள் சேர்க்கை இன்னும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த செயலி மூலமாக பலரும் தவெகவில் உறுப்பினர்களாக ஆர்வம் காட்டி வருவதாகவும், இதனால் தவெக சர்வரே அடிக்கடி முடங்குவதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், உறுப்பினர் சேர்க்கைக்கான ஆப் தொடங்கியது முதலே விஜய் ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் கட்சியில் இணைந்து வருகின்றனர். விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதையடுத்து உறுப்பினர் சேர்க்கை பணி கூடுதல் வேகம் எடுத்துள்ளது. இதனால், ஒரே சமயத்தில் பலரும் உறுப்பினர் சேர்க்கை பணியை ஆர்வத்துடன் செய்வதால் அடிக்கடி சர்வர் முடங்கி வருகிறது.

இதனால், உறுப்பினர்களாக சேர விரும்பும் நபர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம். சர்வர் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தவுடன் செயலியில் பதிவேற்றும் பணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தில் எளிமையாக உறுப்பினர்களாக இணையும் வகையில் வாட்ஸ்அப், டெலிகிராம், செயலி என அனைத்து லிங்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான லிங்குகள் இதுதான்..

1) WhatsApp users - https://bit.ly/tvkhq

2) TelegramApp users - https://t.me/tvkvijaybot

3) WebApp users - https://bit.ly/tvkfamily

4) Send WhatsApp message as 'TVK' to 09444-00-5555

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+