கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.. சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்.. வனத்துறை அறிவிப்பு
கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சூழல் சுற்றுலா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கோவை குற்றாலம், சிறுவானி மலைத்தொடர்களில் தோன்றும் மென்மையான நீர்வீழ்ச்சியுடன் அற்புதமான இடமாக இருக்கிறது. கோவை மாநகரன் மையப்பகுதியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் நகரத்தின் மேற்கே மேற்கு தொடர்ச்சிமலைத்தொடரில் அமைந்திருக்கிறது.. இந்த நீர் வீழ்ச்சியின் மேல் பகுதியில் தான் சிறுவானி அணை உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டின் உள்ள நீர் வீழ்ச்சி மிக அருமையான மலை அடிவாரத்தில் நீர் வீழ்ச்சியாகும். 100 அடி உயரத்தில் இருந்து கீழே தண்ணீர் விழுகிறது. கோவை மாநகருக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த கோவை குற்றலாத்திற்கு விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள். இங்கு சூழியல் சுற்றுலா மிகவும் பிரபலம்.

கோவை குற்றாலம் அருவி என்பது வெறும் அருவி மட்டுமல்ல; கோவை மக்களுக்கு இயற்கை மருந்து போல் இருக்கிறது. மன அழுத்தில் இருந்து விலக்கி, இயற்கைக்கு மிக அருகில் செல்ல விரும்பும் மக்களுக்கு பிடித்த இடமாக உள்ளது. குடித்தால் தித்திக்கும் தண்ணீர், சுற்றிலும் ழை, தூய்மையான காற்று, செல்போன் இணைப்பு வேலை செய்யாத இடம், வனத்திற்கு பயணம் என்று பிரம்மிப்பான அனுபவத்தை கோவை குற்றலாம் தருகிறது. இதனால் அமைதியைத் தேடுவோருககு, காதலர்களுக்கு, குடும்பத்தினருக்கு, திருமணமான ஜோடிகளுக்கு பிடித்த இடமாக இருக்கிறது.
இப்படியான கோவை குற்றாலம் அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அருவிக்கு வரும் நீரின் அளவு திடீரென அதிகரித்து, நீர்வீழ்ச்சியில் அபாயகரமான முறையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள சூழலில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இன்று (25/08/2026) முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தெரிவித்து உள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்கு நேரில் சென்று ஏமாற்றம் அடைவதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மழை குறைந்து அருவியில் நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகே, சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்து உள்ளது.


Click it and Unblock the Notifications
