ஸ்டாலினை கண்டு அஞ்சும் எடப்பாடி.. விக்கிரவாண்டி தேர்தல் புறக்கணிப்பின் பின்னணி இதுதான் - வேல்முருகன்
கோவை: முதல்வர் ஸ்டாலினுக்கு பயந்து தான் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலை அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பின்வாங்கி உள்ளார் என்று கோவையில் நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசினார்.
கோவையில் திமுகவின் முப்பெரும் விழா நடந்து வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றுமு் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்து வருகிறது.

இந்த விழாவில் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தலைவர் கலைஞர் என்றபோதே இந்தியாவில் முழுவதும் இருக்கும் மக்கள் அனைவரும் திரும்பி பார்க்கிற ஆளுமையாக, அவர் வாழ்ந்த காலம் வரை இந்தியா நாட்டின் மிகப்பெரிய அரசியல் மூத்த தலைவராக இருந்தார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர்களை, இந்திய நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை தலைவர்களை தேர்வு செய்த ஆற்றல் மிகுந்த தலைவராக வாழ்ந்து மறைந்தவர் கலைஞர்.
திமுகவின் லட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் உயிர் மூச்சாய் வாழ்ந்து மறைந்த தலைவன். உடன்பிறப்பே என்ற ஒற்றை குரலால் லட்சப்போ லட்சம் தொண்டர்களை தனது பேச்சாற்றலால் தன்வசப்படுத்திய தலைவன். அந்த தலைவனுக்கு நிகராக தமிழகத்தில் யாரும் உருவாக முடியாது என்பதை நிரூபித்து காட்டிய தலைவன்.
ஆனால் ஒன்றை ஸ்டாலின் உடைத்து இருக்கிறார். அதுதான் கலைஞர் காலத்தில் காணாத வெற்றி. 9 தேர்தல்களில் இத்தகைய கூட்டணி கட்சிகளைவைத்து தொடர்ந்து கலைஞரால் வெற்றி பெற முடியாததை ஸ்டாலின் படைத்திருக்கிறார். அதற்காக ஸ்டாலினுக்கு பாராட்டு விழா.
விக்கிரவாண்டியில் நேற்று திருமாவளவன் பேசும்போது ஒன்றை கூறினார். இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி என்பது 2026ல் தமிழ்நாட்டில் நடக்கும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் கூறியபோல் 200க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான முதல் நிகழ்வாக அமைய வேண்டும் என்று கூறினார். கண்டிப்பாக அது சாத்தியம். அது நடக்கப்போகிறது. எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கட்டுக்கோப்பான இந்த கூட்டணி, கட்டுக்கோப்பான ஒரு கட்சி, கட்டுக்கோப்பான சமூக நீதி இயக்கம் மூலம் தேர்தலை சந்திக்கிற போது எதிரிகள் அச்சப்பட்டு பின்வாங்குகிறார்கள்.
இந்த தேர்தலை சந்தித்தால் இந்த கட்சி படுபாதாளத்தில் தள்ளிவிடுமோ என்ற பயத்தில் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வருகிறது. மகிழ்ச்சி. அதேநேரத்தில் சட்டசபை தேர்தலில் முன்னுதாரணமாக வைத்து நம் தொண்டர்கள் சோர்ந்து விடக்கூடாது. மிதப்பாக இருந்து விடக்கூடாது'' என்றார்.












Click it and Unblock the Notifications