கோவை தெற்கில் களமிறங்கும் திமுக.. ராஜீவ் காந்தியை தயார் செய்யும் செந்தில் பாலாஜி.. வானதி எஸ்கேப்!
கோவை: கோவை தெற்கு தொகுதியில் இருந்து வானதி சீனிவாசன் மாற உள்ளதாக சொல்லப்பட்டு வரும் சூழலில், அங்கு திமுக நேரடியாக களமிறங்க முடிவு செய்திருக்கிறது. திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கான பணிகளை செந்தில் பாலாஜி மூலமாக திமுக தலைமை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி இருப்பதால், திமுகவினர் ஒவ்வொரு நாளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இம்முறை திமுக கொடியை பறக்கவிட வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்றில் கூட திமுக வெல்லவில்லை.

செந்தில் பாலாஜி பொறுப்பு
இதனால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக போட்டு இந்த தேர்தலில் திமுக பணிகளை கடந்த ஓராண்டாகவே செய்து வருகிறது. SIR பணிகளிலும் கூட கோவையில் திமுகவினர் செய்த செயல்கள் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றது. இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதிக்கு மாற முடிவு செய்திருக்கிறார்.
கோவை தெற்கு
கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் தோற்கடித்தார். ஆனால் இம்முறை தொகுதியில் சிறுபான்மை மக்கள் அதிகளவில் இருக்கின்றனர். அதேபோல் SIR பணிகளில் திமுக செய்த பணிகளால், அந்த தொகுதி திமுக வசம் செல்லும் என்று பார்க்கப்படுகிறது.
வேட்பாளர் ராஜீவ் காந்தி
இதனால் கோவை வடக்கு தொகுதியை குறி வைத்து வானதி சீனிவாசன் பிரதமர் முகாம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் கோவை தெற்கு தொகுதியில் இம்முறை திமுக நேரடியாக களமிறங்க திட்டமிட்டிருக்கிறது. இந்த தொகுதியின் வேட்பாளராக திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தியை தயார் செய்து வருகிறது.
திமுக ஆதரவு
ஏற்கனவே 2024 நவம்பர் மாதத்தின் போதே நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளரை திமுக பக்கம் கொண்டு வந்திருந்தார் ராஜீவ் காந்தி. இதனால் செந்தில் பாலாஜியிடமும் நல்லப் பெயரை பெற்றுள்ள அவர், கோவை தெற்கு தொகுதியில் பல்வேறு பணிகளையும் தொடர்ச்சியாக செய்து வருகிறார். ஏற்கனவே கிணத்துக்கடவு தொகுதியில் திமுகவின் கைகள் ஓங்கியுள்ள நிலையில், கோவை தெற்கிலும் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications