சென்னை, கோவையில் மின்சார பஸ்கள் அறிமுகம்.. அமைச்சர் வேலுமணி தகவல்
Recommended Video

கோவை: தமிழக தலைநகர் சென்னையிலும், கோவையிலும், எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் 10 புதிய பேருந்துகளின் இயக்கத்தை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று கொடியசைத்து துவக்கிவைத்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 10 ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்காக வாங்கப்பட்ட 471 புதிய பேருந்துகளின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இதில் கோவை மண்டலத்திற்கான 10 புதிய பேருந்துகளின் இயக்கத்தை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி இன்று உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வர் வாரி வாரி வழங்கியுள்ளார்.
முக்கிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு 80 சதவீத விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளது, மேற்கு புறவழிச்சாலைக்கு நிலம் எடுக்கும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. தற்போது கோவை மண்டலத்திற்கு வழங்கப்பட்டுள்ள பேருந்துகள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. சென்னைக்கு 80 மின்சார பேருந்துகளும், கோவையில் 20 மின்சார பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றது. அதற்கான பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் மேற்கொண்டு உள்ளது.
இவை செயல்பாட்டிற்கு வரும் போது செலவு குறைவதுடன் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
-
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications