ஒரே மர்மம்.. காதில் வழியும் ரத்தம்.. காயங்கள்.. சுருண்டு கிடந்த யானை சடலம்.. பரபரப்பில் தேக்கம்பட்டி
மேட்டுப்பாளையம் அருகே 20 வயது யானை உயிரிழந்தது
கோவை: ஒரே மர்மம்.. யானை எப்படி இறந்தது என்றே தெரியவில்லை.. அதன் காதில் ரத்தம் வந்தது எப்படி என்றும் தெரியவில்லை.. மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே, தேக்கம்பட்டி பகுதிகளில் நிறைய யானைகள் வலம் வந்து கொண்டிருக்கும்.. இந்த பகுதி மட்டுமல்லாது, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் யானைகள் தேக்கம்பட்டிக்கு வந்துவிடும்... இதற்கு காரணம் பக்கத்திலேயே பவானி ஆறு உள்ளதால், தாகம், உணவுக்காக இங்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், ஒரு தனியார் தோட்டத்தில், ஒரு யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.. இந்த தோட்டமானது, யானைகள் முகாம் நடந்த இடத்துக்கு பக்கத்திலேயே உள்ளது.. அதனால் வனத்துறையினரும் உடனடியாக சென்றனர்.. அந்த யானை சுருண்டு சடலமாக விழுந்து கிடந்தது.. அது ஒரு பெண் யானை.. காதில் ரத்தம் வழிந்தபடியே உள்ளது... காயங்களும் உள்ளதாம்.
20 வயசு இருக்கும் என்கிறார்கள்.. காதில் எப்படி காயம் ஏற்பட்டது என தெரியவில்லை.. யாராவது துப்பாக்கியில் சுட்டுவிட்டார்களா? அல்லது வெடியை வைத்து விட்டார்களா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
இந்த வனச்சரகத்தில் மட்டும் ஓரிரு மாதங்களில் 6 யானைகள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.. இதனால் வனத்துறையினர் மட்டுமல்லாமல், சூழலியல் செயற்பட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.. இந்த சோகத்துக்கு நடுவே, இதே பகுதியில் இன்னொரு 10 வயசு ஆண் யானைக்கு உடம்பு சரியில்லாமல் படுத்துள்ளதாம்.. அந்த யானைக்கு இப்போது சிகிச்சை நடந்து வருகிறது. தொடர்ந்து யானைகள் இறந்து வருவதால், மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications