இது எங்க ஏரியா உள்ளே வராதே...பொள்ளாச்சி டூ நவமலை அரசு பேருந்தை மறித்த யானைக்கூட்டம்- பயணிகள் அலறல்!
பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பகம் நவமலையில், சாலையில் சென்ற அரசு பேருந்தை யானைக் கூட்டம் வழிமறிக்கும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Recommended Video
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச் சரகங்களிலும், யானை, சிறுத்தை, புலி, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்வதால், வனவளம் மீண்டும் பசுமையாக மாறியுள்ளதோடு, நீர்நிலைகளில் வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீரும் கிடைக்கிறது. இதனால், யானைகள் ஆங்காங்கே முகாமிட்டுள்ளதோடு, திடீரென சாலையையும் கடந்து செல்கின்றன. அப்போது அவ்வழியாக செல்லும் வாகனங்களையும் வழிமறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இப்பகுதியில், யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், தொழிலாளர்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பாக இருக்குமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பகுதிக்கு உட்பட்ட நவமலைக்கு அரசு பேருந்து தினசரி ஐந்து முறை சென்று வருகிறது. அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள், மின்சார ஊழியர்கள், பள்ளி குழந்தைகள் பேருந்தில் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில், இன்று காலை பொள்ளாச்சியில் இருந்து நவமலை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்த போது, வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைக் கூட்டம், சாலையின் குறுக்கே வந்து பேருந்தை வழிமறித்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்து அலறினர். இதனையடுத்து, வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பேருந்தை மறித்த யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்தை யானைகள் வழிமறித்தபோது, பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர், அதனை வீடியோ எடுத்துள்ளார். அந்த பரபரப்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications