10 ரூபாய்க்கு டிக்கெட் போட்டால் கூட யாரும் ஏறுவதில்லை.. வெற்றிப்பயணத்தால் கலங்கும் ஆட்டோ டிரைவர்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை: "10 ரூபாய்க்கு கட்டணம் நிர்ணயம் செய்தால்கூட யாரும் ஆட்டோவில் ஏறுவதில்லை. இப்போது எங்களுக்கும் 'வெற்றிப்பயணம்' என்ற பெயரில் ஓடும் அரசுப் பேருந்துகளுக்கும் இடையேதான் போட்டியே என்ற நிலை உருவாகியுள்ளது. ஆட்டோவில் ஏறுவதற்குத் தயாராக இருந்த பெண்கள் அனைவரும், அரசுப் பேருந்து வந்ததும் அதில் ஏறிச் சென்றுவிட்டார்கள்." - வெற்றிப்பயணம் திட்டத்தால் கலங்கி நிற்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் விடியல் பயணம் திட்டத்தை அனைத்து அரசுப் பேருந்துகளிலும் விஜய் தலைமையிலான தவெக அரசு நீட்டித்துள்ளது. அக்டோபர் 2 முதல் 'வெற்றிப்பயணம்' என்ற பெயரில் நீட்டிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி, எஸ்.இ.டி.சி (SETC) மற்றும் தொலைதூரப் பேருந்துகள் தவிர, பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்க முடியும். குறிப்பாக, மாவட்டத்திற்குள் இயங்கும் எந்தவொரு அரசுப் பேருந்திலும் கட்டணமின்றிப் பயணிக்க இயலும். பக்கத்து மாவட்டங்களைப் பொறுத்தவரை, அவற்றின் முதல் நகரங்களை இணைக்கும் பேருந்துகளுமே வெற்றிப்பயணம் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

Even with a 10-rupee fare no one is boarding Auto-rickshaw drivers affected by the Vetri payanam

தோராயமாக 50 முதல் 70 கி.மீ வரை கூட கட்டணமின்றி பெண்கள் பயணிக்க முடிகிறது. இந்தத் திட்டத்தால் பெண்கள் பயனடைந்தாலும், ஆண்களுக்குப் பலனில்லை. அதேநேரம், பொருளாதார ரீதியாகப் பார்க்கும்போது தனியார் பேருந்துகளை இது மோசமாகப் பாதித்துள்ளது. அதேபோல் ஆட்டோ ஓட்டுநர்களையும், கால் டாக்ஸி (Call Taxi) ஓட்டுநர்களையும் இத்திட்டம் கடுமையாகப் பாதித்துள்ளது. உள்ளூர் கிராமப்புறங்களில் ஆட்டோ ஓட்டி வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த பல ஆட்டோ ஓட்டுநர்கள், வெற்றிப்பயணம் திட்டத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

முன்பு எப்போதாவது ஒருமுறை அல்லது குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பிங்க் നിറப் பேருந்துகள், அதாவது சாதாரண கட்டணப் பேருந்துகள் வரும். அந்தப் பேருந்துகளில் ஏறிச் செல்ல முடியாதவர்கள், உள்ளூரில் ஷேர் ஆட்டோக்களில் ஏறிச் செல்வார்கள். இப்போது வெற்றிப்பயணம் திட்டம் காரணமாக, பெண்கள் ஆட்டோவில் ஏறி அமர்ந்திருந்தாலும்கூட, அரசுப் பேருந்து வந்ததும் ஆட்டோவை விட்டு இறங்கிப் பேருந்தில் ஏறிவிடுகிறார்கள்.

இதனால் ஆட்டோக்களை இயக்க முடியாத துயர நிலையில் ஓட்டுநர்கள் தவிக்கின்றனர். நகரங்களிலும் முன்பு கால் டாக்ஸிகளில் ஏறிச் சென்ற பலர், தற்போது வெற்றிப்பயணம் பேருந்துகளில் சென்றுவிடுவதால் கால் டாக்ஸிகளை முன்பதிவு செய்ய முன்வருவதில்லை. இதனால் அவர்களின் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெளியிட்ட வீடியோவில், "மக்களே, போட்டியே வந்து எங்களுக்கும் அவங்களுக்கும் தான்... ஆட்களை ஏற்றி வைத்திருந்தோம். ஏற்றி வைத்திருந்த ஆட்களை அரசுப் பேருந்து ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டது. வெற்றிப்பயணம் என்ற பெயரில் இலவச வண்டி போட்டுட்டாங்க... ஒன்றும் செய்ய முடியவில்லை. பார்ப்போம்... காத்திருப்போம்... பயணிகள் ஏறியதும் கிளம்புவோம். 10 ரூபாய்க்கு கட்டணம் போட்டு ஓட்டினாலும் ஆள் ஏற மாட்டேங்குறாங்க. ஒன்றுமே செய்ய முடியவில்லை" என்று மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+