கோவை குலுங்கணும்! அதிமுகவினர் குவியணும்! ஆர்ப்பாட்டத்துக்கு ஆள் திரட்டும் எஸ்.பி.வேலுமணி!
கோவை: கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் திங்கள்கிழமை அன்று அதிமுக சார்பில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில், பிரம்மாண்டம் காட்ட திட்டமிட்டுள்ளார் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் இதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை பொதுக்கூட்டம் போல் நடத்தியிருக்கிறார் எஸ்.பி.வேலுமணி.
தமிழகத்திலேயே கோவையை போல் வேறு எந்த ஊரிலும் கூட்டமில்லை என்று சொல்லும் அளவுக்கு பெருவாரியான எண்ணிக்கையில் கட்சியினரை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார் அவர்.

மின் கட்டணம்
மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 25-ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து முன்னாள் அமைச்சர்களும், அதிமுக மாவட்டச் செயலாளர்களும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம்
அந்த வகையில் கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தையே பொதுக்கூட்டம் போல் நடத்தி கவனம் ஈர்த்துள்ளார்.

மத்திய அரசு
மத்திய அரசு எதைச் சொன்னாலும் அதை கேட்பது போல், மின் கட்டண உயர்வுக்கு மட்டும் மத்திய அரசு மீது திமுக அரசு பழியை போடுவது ஏற்புடையதல்ல எனப் பேசினார். மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதால் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி மிக உறுதியாக இருந்தார் என்றும் ஆனால் இன்று மக்களை பற்றிய எந்த கவலையும் அரசுக்கு இல்லை என திமுகவை சாடினார்.
Recommended Video

அதிக கூட்டம்
இதனிடையே திங்கள்கிழமை கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், அதிமுகவினரை அலை அலையாக பங்கேற்க வைப்பதற்கான பணிகளையும் தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே கோவையில் எஸ்.பி.வேலுமணியும் அமைச்சர் செந்தில் பாலாஜியும் ஒருவரை ஒருவர் எதிர்த்து கடுமையான முறையில் அரசியல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications