ஓட்டுக்கு கொலுசு! கரூர்காரர்கள் 10 நாட்களில் ஊருக்கு போய்விடுவார்கள்! எஸ்.பி.வேலுமணி விட்ட சவால்!
கோவை: கோவையில் ஓட்டுக்கு கொலுசு கொடுக்கும் புதிய கலாச்சாரத்தை திமுகவினர் தொடங்கி வைத்திருப்பதாக முன்னாள் அமைச்சரும், கோவை மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவையில் முகாமிட்டிருக்கும் கரூர்காரர்கள் இன்னும் 10 நாட்களில் ஊருக்கு போய்விடுவார்கள் என்றும், மேயர் பதவி தொடங்கி பேரூராட்சி தலைவர் பதவி வரை அதிமுக தான் கைப்பற்றப் போகிறது என சவாலே விடுத்தார்.
இதேபோல் காலம் இப்படியே இருந்துவிடாது என்றும் நிச்சயம் மாறும் என்பதை மனதில் வைத்து காவல்துறையினர் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோபம் காட்டினார்.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி கோவை சிவானந்தா காலனி பகுதியில் பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை காவல்துறையினர் திமுகவினரை போலவே செயல்படுவதாகவும் காலமும், சூழலும் நிச்சயம் மாறும் எனவும் தெரிவித்தார். கரூரிலிருந்து கொலுசுடன் வந்திறங்கியுள்ள திமுகவினர், கோவையில் வீடு வீடாக கணக்கெடுத்து பணத்தையும், கொலுசுகளையும் கொடுத்து வெற்றிபெற்று விடலாம் என நினைப்பதாக பேசினார்.

அச்சுறுத்த முடியாது
கோவை மக்களை அமைச்சர் செந்தில்பாலாஜி தவறாக எடை போட்டுவிட்டார் என்றும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அதிமுகவே வெற்றிபெறும் எனவும் சவால் விடுத்தார் எஸ்.பி.வேலுமணி. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கிடப்பில் போட்டு வருவதாகவும் வழக்குகளால் தன்னையும் அதிமுக நிர்வாகிகளையும் அச்சுறுத்திவிடலாம் என அவர் எண்ணுவதாகவும் சாடினார் எஸ்.பி.வேலுமணி.

வேலை செய்யவில்லை
கோவையில் திமுகவினர் எந்த வேலையும் செய்யாமல் பணத்தை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி தேர்தலை சந்திப்பதாகவும் அதிமுகவினர் தேர்தல் முடியும் வரை தூக்கத்தை துறந்து பணியாற்ற வேண்டும் எனவும் பேசினார். எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை கண்டு யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என கூட்டத்தில் இருந்தவர்களுக்கு தைரியம் கூறிய எஸ்.பி.வேலுமணி, கோவைக்கு அதிமுக ஆட்சியில் என்னென்ன செய்தோம் என்பதை எடுத்துக்கூறி வாக்குகேட்குமாறு அறிவுறுத்தினார்.

காரசாரம்
அண்மை நாட்களாக கோவை காவல்துறையினர் மீது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து காரசாரமான முறையில் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தனது பரப்புரையின் போது பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications