காலால் "குவாலிட்டி செக்கிங்" செய்த வானதி.. மலைத்து பார்த்த ஜனம்.. எங்கே அவர்? "வெறும் குப்பை".. செம
கோவை தெற்கு தொகுதியில் புதிய ஜிம் ஒன்றை திறந்து வைத்தார் வானதி சீனிவாசன்
கோவை: பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசனின் வீடியோ ஒன்று பாஜகவினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.. அந்தவகையில், வானதிக்கு கோவை தெற்கு தொகுதியில் மவுசும், பெருமையும் கூடி வருகிறது.. என்னவாம்?
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை பொறுத்தவரை தொகுதி மக்களுடன் எந்நேரமும் நெருங்கியே இருப்பவர்.. வெற்றி பெற்று எம்எல்ஏவான பிறகு, அவருக்கான பொறுப்புகள் அங்கு கூடிவிட்டன.
முதல்முறையாக இந்த முறை எம்எல்ஏவாகி இருப்பதால், தெற்கு தொகுதி மக்கள் பூரிப்புடன் இருக்கிறார்கள்.. காலையில் இருந்து மாலை வரை ஓய்வின்றி, மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார்..

வானதி சபாஷ்
தேசிய அளவில் இவருக்கான பொறுப்புகள் இருந்தாலும்கூட, தன்னுடைய தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்து வருகிறார்.. அத்துடன் திமுகவையும் குறிப்பாக, செந்தில்பாலாஜியையும் விடாமல் விமர்சித்தும் வருகிறார்.. இந்நிலையில், தன்னுடைய தொகுதிக்கு ஒரு புதிய உடற்பயிற்சி கூடத்தை அளித்துள்ளார் வானதி சீனிவாசன். அதனை தன் கையாலேயே திறந்தும் வைத்தார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது வானதி சீனிவாசன் சொன்னதாவது:

ஜிம் ஜிம்
"கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட, அசோக் நகர் பகுதியில் இருக்கக்கூடிய இந்த பார்க்கில், ஒரு திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை அளித்திருக்கிறோம்.. சுமிட் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இதை அமைத்து தந்துள்ளார்கள்.. நம்மாழ்வார்கள் நண்பர்கள் குழு, நல்ல பணியினை இங்கு செய்து வருகிறார்கள்.. இத்தனைக்கும் அரசாங்கத்தின் பராமரிப்பு என்பது இந்த பார்க்குக்கு கிடையாது.. அப்படி இருந்தும்கூட, இவர்களே சுகாதாரமாக பேணி, யோகா வகுப்புகளையும் நடத்தி வருகிறார்கள். அவர்களின் பணிகளுக்கு நாங்கள் என்றுமே ஆதரவாக இருப்போம்.

புது புது கருவிகள்
அரசாங்கத்தின் பராமரிப்பு என்பது பார்க்குகளில் குறைந்துவிட்டது.. இதனால், பொதுமக்கள் பணம் கட்டி ஜிம்முக்கு போக வேண்டிய நிலைமை உள்ளது.. பணம் கட்டி அவர்கள் பெறுகின்ற வசதியை, இலவசமாக இந்த பகுதி மக்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காகவே இந்த ஜிம்மை நாங்கள் அமைத்துள்ளோம்.. இந்த ஜிம்மில், ஆண்களுக்கு உடற்பயிற்சி செய்வது போல பல கருவிகள் இருந்தாலும், பெண்களுக்குகூட விரைவில் பிரத்யேகமாக புதிய ஜிம் ஒன்றை அமைத்து தர போகிறோம்..

தண்ணீர் பந்தல்
கோவை மாநகர் முழுவதுமே சாலைகள் மோசமாக இருக்கிறது.. எத்தனை முறை எடுத்து சொன்னாலும், அரசு சார்பில் எந்த முன்னேற்றமும் இல்லை.. என்னுடைய தொகுதியியே இந்த பிரச்சனை உள்ளது.. இங்கு மக்கள் பயன்படுத்தும் ரோடுகள் நிறைய உள்ளன.. அதேபோல, நிறைய வணிக வளாகங்களும் உள்ளன.. 2 மாசத்துக்கு முன்பு, தண்ணீர் பந்தலில் இருந்து சேரன் மாநகர் வரைக்கும் ஒரு ரோடு போட்டிருந்தாங்க.. அந்த ரோடு இப்போது வந்த மழைக்கே குண்டும் குழியுமாக ஆகிவிட்டது.. உண்மையிலேயே திட்ட மதிப்பிட்டின்படிதான் இவர்கள் ரோடுகளை போடுகிறார்களா?

குப்பை கூளங்கள்
பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி எப்போது வந்தாலும், நாங்கள் ரோடு போடறோம், கவனிக்கிறோம் என்று வெறும் வாய் வார்த்தையாக சொல்கிறாரே தவிர, உண்மையிலயே களத்தில் அப்படி எதுவுமே இல்லை.. 5 நாளுக்கு ஒரு முறைதான் குப்பைகளை அள்ளுகிறார்கள்.. தூய்மை பணியாளர்களை இன்னமும் ஒப்பந்த அடிப்படையிலேயே வைத்திருக்கிறார்கள்.. சாலைகள் வசதியை அரசாங்கம் கவனத்தில் எடுத்து கொண்டு பணி செய்ய வேண்டும் என்பதற்காகவே இன்னும் ஒரு வாரத்திற்குள், பாஜக மாவட்ட தலைவர் தனியாகவே போராட்டம் நடத்த போகிறார்.. விரைவில் தேதி அறிவிக்கப்படும்" என்றார்.

காலை ஆட்டி ஆட்டி
முன்னதாக, பார்க்கில் ஜிம்மை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த வானதி சீனிவாசன், அங்கிருந்த ஒவ்வொரு உடற்பயிற்சி கருவிகளை பார்வையிட்டார்.. ஒவ்வொரு கருவிகளிலும், உடற்பயிற்சிகளை செய்து, அக்கருவிகள் உடனுக்குடன் அவர் முன்னிலையிலேயே ஆராயப்பட்டன.. இரும்பு கம்பிகள் வலுவாக இருக்கின்றனவா என்று வானதி அங்கிருந்தோரிடம் தனித்தனியாகவும் விசாரித்தார்.. பின்னர், உடற்பயிற்சி கருவி ஒன்றில் ஏறி நின்றுக்கொண்ட வானதி சீனிவாசன், தன்னுடைய கால்களை ஆட்டியவாறே, அந்த கருவியின் செயல்பாடு எப்படி இருக்கிறது? உறுதியாக உள்ளதா? என்று ஆராய்ந்தார். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்து பார்த்து தன்னுடைய தொகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறார் வானதி.. அந்த வகையில், இந்த வீடியோவும் இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications