கிடாக் கறி.. இன்னிக்கு ஒரு பிடி.. கிருஷ்ணம்மாள் பாட்டிக்கு 106வது ஹேப்பி பர்த் டே.. ஊரே ஹேப்பி
கோவை: கோவை அருகே, மூதாட்டியின் 106 வது பிறந்தநாளை கிடா வெட்டி விருந்தளித்து, அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பரபரப்பான இந்த கால சூழ்நிலையில், வீட்டில் முதியவர்கள் இருந்தால் ஒருசிலர், தங்களுக்கு பெரும் சுமையாக இருப்பதாக கருதுகின்றனர். வேறு சிலரோ, வயதான பெற்றோர்கள் வீட்டில் இருந்தால், தங்களுக்கு இடையூறாகவும், பாரமாகவும் இருப்பதாக நினைத்து, அவர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு விட்டு விடுவதும் ஆங்காங்கே அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன.

வீட்டிற்கு முதியவர்கள் தேவை
ஆனால், வீட்டில் முதியோர்கள் இருந்தால் நல்லது என நினைப்பர்களும் இருக்கிறார்கள். மூத்தவர்களின் சொற்படி நடக்கும் குடும்பமும் இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசகராகவும், தனது அனுபவங்களை கற்றுக்கொடுக்கும் ஆசானாகவும் வீட்டில் உள்ள பெரியவர்கள் இருந்து வருகிறார்கள். அவர்களிடம் அன்பும், கருணையுமாக நடந்து கொள்ளும் குடும்பங்களும் இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணமாக, கோவை அருகே 106-வயதான மூதாட்டியின் பிறந்த நாளை, அவரது குடும்பத்தினர் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

கிருஷ்ணம்மாள் பாட்டி
கோவை தடாகம் சாலை கணுவாய் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் பாட்டி. கடந்த 1917ல் பிறந்த இவர், இன்று 106-வது வயதை அடியெடுத்து வைக்கிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் மூலம் பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள் என கிருஷ்ணம்மாள் பாட்டி குடும்பத்தில் தற்போது10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

பிறந்த நாள்
ஐந்து தலைமுறையைக் கண்டவரும், ஆயிரம் பிறைக்கும் மேல் கண்டவருமான கிருஷ்ணம்மாள் பாட்டியின்106-வது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக, கிருஷ்ணம்மாள் பாட்டியை புத்தாடை அணிய செய்து, தலைக்கு கிரீடம் வைத்து, சந்தனம் மாலை அணிவித்து அமர்க்களப் படுத்தினர். மேலும், பாட்டிக்கு பாத பூஜை செய்ததோடு, குடும்ப உறுப்பினர்கள் அவரிடம் ஆசீர்வாதமும் பெற்றனர்.

கிடா வெட்டி விருந்து
அதோடு விடாமல், பாட்டியின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என சுமார் 200க்கும் மேற்பட்டவர்களை பிறந்த நாள் விழாவுக்கு அழைத்து வந்து, கிடா வெட்டி அனைவருக்கும் சிறப்பான முறையில் விருந்தளித்தனர். உணவு உண்ட உறவினர்களும் கிருஷ்ணம்மாள் பாட்டியின் பாதத்தில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications